குழந்தைகள் வளர்ப்பு: `பெற்றோர் இந்த 7 கட்டளைகளை நினைவில் வையுங்கள்!' - கவிஞர் ஜோ.மல்லூரி

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் `விடியல் சமூகநல அறக்கட்டளை' சார்பில் 9-ஆவது ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் விடியல் சமூக நல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார்.

கருத்தரங்கில், திரைப்பட நடிகரும், கவிஞருமான ஜோ.மல்லூரி பங்கேற்று பேசியதாவது, `` புஞ்சை புளியம்பட்டி போன்ற சிறிய ஊரில் தொடர்ச்சியாக புத்தகத் திருவிழா நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. இங்கு ஆர்வத்துடன் மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதை வியப்புடன் கண்டு மகிழ்கிறேன்.  எப்படி குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதற்கு பெற்றோர்களுக்கு ஏழு கட்டளைகள் உள்ளன. 1.ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் குழந்தைகளை ஆதரவற்றோர் அல்லது முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். 2.ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 3.மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்கேயாவது பயணமாக அழைத்துச் செல்லுங்கள்.4. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை புத்தகத்தை பரிசளியுங்கள். 5.மாதம் ஒருமுறை குழந்தைகளை மௌன விரதம் கடைபிடிக்கச் செய்யுங்கள்.6. வாரம் ஒருமுறை உங்கள் வீட்டு கழிப்பறையை அவர்களையே சுத்தம் செய்ய வையுங்கள். 7. தாய், தந்தையை மதித்து நடக்க வேண்டும்.

ஜோ.மல்லூரிக்கு நினைவுப்பரிசு.

இந்த ஏழு கட்டளைகளை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி தந்தால் அவர்கள் வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம். அதேபோல குழந்தைகள் தாய் தந்தையை மதித்து நடக்க வேண்டும். அவர்கள் தரும் சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு, தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு என்பதை பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் எதையும் சரிசமமாக கையாள முடியும்.
எவன் ஒருவன் தாய் தந்தையை மதித்து நடக்கிறானோ உலகில் அவனே தலைசிறந்த மாமனிதனாக உருவாகிறான். ஒவ்வொரு குழந்தையும் தாயின் முகத்தையும், தந்தையின் பாதத்தையும் அடிக்கடி பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களின்  கனவு,  உழைப்பு, தியாகம் உங்களுக்கு புரியும்.
நான் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தபோது ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தைகளின் கையில் 3 பொருட்கள் இருந்தன. அவை சாக்லேட், பொம்மை  மூன்றாவதாக புத்தகம். அதுபோல,

இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களில் பெற்றோர்கள் நல்ல நூல்களை வாங்கி பிள்ளைகளுக்கு பரிசளித்து அவர்களை ஞானமுள்ள மனிதனாக உருவாக்க வேண்டும் என்றார்.


from Latest News https://ift.tt/gYlc5WP

Post a Comment

0 Comments