விண்வெளியில் ஒரு டின்னர்... அதிசய அனுபவங்களை அள்ளித் தரும் புதுமையான உணவகம்!

பல வகையான உணவகங்களில் அமர்ந்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் விண்வெளியில் அமர்ந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்? அட விண்வெளிக்குச் சென்று எப்படிச் சாப்பிட முடியும் என்று கேட்கிறீர்களா..? 

முடியும்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பே லேக்கில் உள்ளது, `The Space 220' என்ற உணவகம். டிஸ்னி உலகின் நான்கு முக்கிய பார்க்குகளில் இதுவும் ஒன்று. இந்த உணவகம் அச்சு அசலாக விண்வெளியில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற செட்-அப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.  

The Space 220

2021, செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில், காலை மற்றும் இரவு நேரத்தில் பூமி எப்படி இருக்கும் போன்ற காட்சிகளை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்குச் செல்லும் பயண அனுபவத்தை ஏற்படுத்துவதற்காக 220 மைல் (355 கிமீ) வரை ஸ்டெல்லர்வேட்டர் எனப்படும் ஸ்பேஸ் லிஃப்ட் மூலம் Centauri Space Station-க்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

இந்நிலையில் இந்த உணவகத்திற்குச் சென்று வந்த தன்னுடைய அனுபவம் குறித்து சமீபத்தில் இன்ஸ்டா பதிவில் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவில்,``இந்த உணவகத்தில் நீங்கள் ரிசர்வேஷன் செய்வது மிகவும் சவாலானது. நீங்கள் இந்த ரெஸ்டாரன்டுக்குள் நுழையும்போது, உணவருந்துவதற்காக நீங்கள் ஸ்பேஸுக்கு அழைத்துச்செல்லப்படும் லிஃப்ட்டை பார்க்கலாம். 

ஒரு விண்கலம் போலத் தோற்றமளிக்கும் வகையில், இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் அமர்ந்து கொண்டு தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும், பூமியையும் பார்க்க முடிகிறது. அதோடு உணவகத்தில் வழங்கப்படும் உணவும் மிகவும் சுவையாக உள்ளது’’ எனப் பதிவிட்டு இருந்தார்.

பலரின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ, வைரலாகி வருகிறது. இந்த உணவகத்திற்குச் செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் 79 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 6,534 ரூபாய்) வரை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

பார்த்ததும் போக வேண்டும் என்று தோன்றுகிறதா? ஆமா அந்த லடாக் ட்ரிப் என்னாச்சு?!



from Latest News https://ift.tt/KfCJ30g

Post a Comment

0 Comments