குஜராத் தேர்தல்: அசோக் கெலாட் பிரசாரக் கூட்டத்தில் புகுந்த காளை மாடு... வைரலான வீடியோ!

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

குஜராத்தில் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. ஆனால், அங்குக் காங்கிரஸின் செல்வாக்கு எப்போதோ சரிந்துவிட்டதாகவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சி பலமாக இல்லை என்கிற சூழல் நிலவுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வின் குஜராத் கோட்டையைத் தகர்க்க வேண்டுமென்ற இலக்குடன் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரமாகப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றன.

இதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, கூட்டத்துக்குள் காளைமாடு நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் காளைமாடு கூட்டத்துக்குள் புகுந்து அங்குமிங்கும் தாவி பொதுமக்களை அச்சுறுத்தியது. இதனால், கூட்டத்துக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/lrd8RJx

Post a Comment

0 Comments