ஓட்டலை மூடிவிட்டு வீடு திரும்பியபோது... லாரி மோதியதில் மராத்தி டிவி நடிகை பலியான சோகம்!

மராத்தி டிவி தொடர்களில் நடித்திருப்பவர் கல்யாணி குராலே. இவர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசித்து வந்தார். டிவி நிகழ்ச்சிகளிலில் வாய்ப்பு குறைந்ததால் கோலாப்பூர் அருகே ஹலோண்டி என்ற இடத்தில் சமீபத்தில் ஓட்டல் ஒன்றை திறந்திருந்தார். வழக்கமாக இரவு ஓட்டலை மூடிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கோலாப்பூர் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் இரவு 10.30 மணிக்கு தனது ஓட்டலை மூடிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாகனம் சாங்கிலி-கோலாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த காங்க்ரீட் மிக்ஸர் ஏற்றி வந்த லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் கல்யாணி பலத்த காயம் அடைந்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீஸார் கல்யாணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். போலீஸார் லாரி டிரைவரை கைது செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் இந்த விபத்து நடந்ததால் காயம் அடைந்த கல்யாணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கல்யாணி விபத்துக்கு சிறிது நேரத்திற்கு முன்புகூட சில தகவல்களை பதிவிட்டு இருந்தார். கோலாப்பூரில் பிறந்து வளர்ந்த கல்யாணி தனது நடிப்புக்காக புனேவுக்கு குடிபெயர்ந்தார். கொரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். 32 வயதாகும் கல்யாணி இளம் வயதில் விபத்தில் மரணமடைந்த செய்தி மராத்தி டிவி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.



from Latest News https://ift.tt/u30Td7s

Post a Comment

0 Comments