பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நலத்திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க தேர்தல் தேதியை அறிவிப்பதை சில நாள்கள் தள்ளி வைத்ததாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் நரேந்திர மோடி பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இம்முறை காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது ஆம் ஆத்மி கட்சியும் வழக்கம் போல் இலவசங்களை அள்ளித்தெளித்துவிட்டு தேர்தல் களத்தில் நிற்கிறது. இதனால் மும்முனைப்போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த தேர்தல் பணிகளுக்கு நடுவில் பாவ்நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் தந்தையை இழந்த 551 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை பிரதமர் மோடி நடத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பேசிய மோடி, ``சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை அழைத்து மீண்டும் ஒரு முறை திருமணம் நடத்தி பணத்தை வீணாக்காதீர்கள். பணம் அதிகமாக இருந்தால் பணத்தை குழந்தைகளுக்காக சேர்த்து வையுங்கள். முன்பெல்லாம் மக்கள் கடன் வாங்கி பெரிய அளவில் திருமணத்தை நடத்தி வந்தனர். ஆனால் இப்போது ஒரே இடத்தில் அதிகமானோருக்கு திருமணம் நடத்தும் நடைமுறை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்த திருமணத்திற்கு பிறகு பிரதமர் மோடி வல்சாட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் ஒவ்வொரு குஜராத்தியும் நம்பிக்கை நிறைந்தவர்கள். ஒவ்வொரு குஜராத்தியும் உள் ஆத்மாவிலிருந்து பேசுகிறார்கள். நான் தான் இந்த குஜராத்தை உருவாக்கினேன் என்ற சத்தம் ஒவ்வொரு இந்த குஜராத்தியின் இதயத்திலிருந்து வருகிறது. குஜராத்துக்கு களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.
வெறுப்புணர்வை தூண்டுபவர்களை குஜராத்தியர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. களங்கத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இந்த தேர்தலிலும் அதே போன்றுதான் ஏற்படும். குஜராத்தை அவமதிப்பவர்கள், குஜராத்தை அவமதிக்க வழிதேடும் கும்பல்களை குஜராத் 20 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் அவர்கள் பிரச்னையை சந்திக்கின்றனர். குஜராத் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியவில்லை. குஜராத் மக்கள் இரவு பகலாக உழைப்பதால் அவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
முன்னதாக காலையில் நடபெற்ற பிரசாரக் கூட்டத்தில், தனது பேச்சுக்கிடையே குஜராத்தில் கட்சி ஒன்று அவதூறைப் பரப்புவதாய் குற்றம் சாட்டினார். "கடந்த 20 ஆண்டுகளாகக் குஜராத்தில் அவதூறுகளைப் பரப்பிவரும் கட்சியை மக்கள் துடைத்தெறிவார்கள்", என்று கூறினார். மேலும் தனது உரையில் பழங்குடியினர்களுக்காக பாஜக செய்தவற்றைப் பற்றியும், பழங்குடியின மக்கள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்றும் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த அக்டோபர் 13 அன்று அகமதாபாத்தில், "குஜராத் கவுரவ் யாத்ரா"-வில் கலந்து கொண்டார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, மெஹ்சானாவில் 'குஜராத் கவுரவ் யாத்ரா'- வை கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். குஜராத்தில் தொடர்ந்து 6 சட்டசபைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. . குஜராத்தில் புதிதாக நுழைந்த ஆம் ஆத்மி கட்சி, "இது எங்களுக்கும் பாஜக வுக்கும் நடக்கும் நேரடி போர்" என்று கூறியுள்ளது.
from Latest News https://ift.tt/V1P0fIR
0 Comments