தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசு சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறப்பு விழாவை முன்னிட்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட பைக் பேரணியின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. பட்டாசுகளை வெடிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட சந்தீப், குஷால், சுபாஷ் ஆகிய 3 பேர், பட்டாசுகளுடன் லோடு எற்றிச் செல்லும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோவில் இருந்த பட்டாசு மூட்டைகளுக்கு இடையே நின்று கொண்டு, சந்தீப் பட்டாசு ஒன்றை கொளுத்தியிருக்கிறார். அது வெடித்ததும், ஆட்டோவில் இருந்த அனைத்து பட்டாசும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. இதனால் வாகனத்தில் இருந்த சந்தீப் உடல் முழுவதும் தீ பரவியது. அதனால், ஆட்டோவில் இருந்து சந்தீப் குதித்திருக்கிறார். உடனே டி.ஆர்.எஸ் தொண்டர்கள் தீயை அணைக்க முயன்றிருக்கிறார்கள். இந்த காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது. மேலும், வாகனத்தில் இருந்த இருவர் காயமடைந்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை சங்கரெட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 70 சதவிகித தீக்காயம் அடைந்த சந்தீப் (28) ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
மீதமுள்ள இருவருக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விபத்தில் டிஆர்எஸ் மாவட்ட தலைவரும், கைத்தறி நெசவு கழக தலைவருமான சிந்தா பிரபாகருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
from Latest News https://ift.tt/CrLTZR8
0 Comments