IND`உங்களுக்கு எதற்கு இவ்வளவு நாள்கள் ஓய்வு?' ராகுல் டிராவிட்டுக்கு கேள்வி எழுப்பிய ரவி சாஸ்திரி

T20 உலகக்கோப்பைப் போட்டியைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள், மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இப்போட்டி இன்று நவம்பர் 18ம் தேதி தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நியூசிலாந்திற்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள விலையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்துகிறார். இதனிடையே பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியில்லை என்று  இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி20 தொடருக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரவி சாஸ்திரி, "ராகுல் டிராவிட்  அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியில்லை, காரணம் இது பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையிலான உறவைப்  பாதிக்கும். எனக்கு இடைவேளைகளில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் என் அணியையும், வீரர்களையும் புரிந்து கொண்டு அவர்களை என் கட்டுப்பாடில் வைத்திருக்க விரும்புகிறேன். உங்களுக்கு எதற்கு இவ்வளவு ஓய்வு? ஒரு பயிற்சியாளர் ஓய்வெடுக்க ஐ.பி.எல் நடைபெறும் 2-3 மாதங்கள் போதுமானது.  மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் தனது அணியுடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்று  ராகுல் டிராவிட்டை  இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சாடியுள்ளார். 



from Latest News https://ift.tt/JCT1HXk

Post a Comment

0 Comments