அமெரிக்காவின் இளம்வயது கறுப்பின மேயர்; 18 வயது இளைஞரை தேர்வு செய்த மக்கள்!

ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜெய்லன் ஸ்மித் எனும் 18 வயது கறுப்பின இளைஞர், அமெரிக்காவின் இளம்வயது கறுப்பின மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கல்லூரியில் படித்துவரும் ஜெய்லன் ஸ்மித் அமெரிக்காவின் கிராமப்புறமான ஆர்கன்சாஸ் மாகாணத்தின் இளம் கறுப்பின மேயராவார். அமெரிக்க வரலாற்றில் முதல் 18 வயதான மேயர் என்ற பெருமை ஜெய்லன் ஸ்மித்க்கு இல்லை என்றாலும், மேயரான வெற்றியை அவரின் குடும்பம் கொண்டாடி வருகிறது.

டிசம்பர் 7-ம் தேதியன்று வாஷிங்டனில் பேசிய ஸ்மித், ``என்னுடைய தாயால் அழுகையை நிறுத்த முடியவில்லை. 30 அல்லது 40 வயதில்தான் மேயராக வேண்டும் எனக் கிடையாது.என்னால் இப்போதே அதை செய்ய முடியும்" என்று கூறினார்.

ஸ்மித் தனது வெற்றியை ஃபேஸ்புக் பதிவின் மூலம் அறிவித்து, தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஸ்மித்துக்கு பிரசாரத்தின்போது அறிவுரை வழங்கிய லிட்டில் ராக்கின் நகரத் தலைவர் ஃபிராங்க் ஸ்காட் ஜூனியர், ஸ்மித்தின் வெற்றியைப் பாராட்டி, "இவ்வளவு இளம் வயதில் பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்பும் ஸ்மித்தை நினைத்து பெருமைப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். ஸ்மித்துக்கு ஆதரவாக 235-க்கு 185 வாக்குகள் கிடைத்ததாக Crittenden County Clerk அலுவலகம் கூறியுள்ளது.

மேயரான பிறகு பேசிய ஸ்மித், ``மேயராகிய நான் நகரின் வடிகால் சீரமைப்பு, காவல்துறை மேம்பாடு, சமூக ஈடுபாட்டை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்துவேன். மக்களுக்கு பயனுள்ள பெரிய மளிகை கடை ஒன்றையும் கொண்டு வருவேன்" என மக்களுக்கு வாக்களித்துள்ளார். மேலும் மேயர் பதவியில் இருந்து கொண்டே தனது படிப்பையும் தொடர திட்டமிட்டுள்ளார்.



from Latest News https://ift.tt/zmnIESF

Post a Comment

0 Comments