சேலம்: மகள்களை காவிரி ஆற்றில் வீசிவிட்டு, தம்பதி தற்கொலை - வீட்டில் கிடைத்த உருக்கமான கடிதம்

சேலம், தாதகாபட்டியை சேர்ந்தவர்கள் யுவராஜ் - மான்விழி தம்பதியினர். இவர்கள் சேலத்தில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா (7), அக்க்ஷரா (5) என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் நிதிஷா கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது இரண்டாவது மகள் அக்க்ஷராவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்கொலை செய்துக்கொண்ட குடும்பத்தினர்

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டனர் தம்பதியினர். இரண்டு குழந்தைகளுக்குமே சர்க்கரை நோய் வந்துவிட்டதே, இந்த சிறிய வயதில் இவர்கள் இப்படி கஷ்டப்பட வேண்டுமா? என்று குழந்தைகளுடன் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, யுவராஜ் தனது மனைவி மான்விழி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக - தமிழக எல்லை அருகே காவிரி ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டுட்டு, தாங்களும் காவிரியில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி வீட்டில் உள்ள கடிதத்தை கைப்பற்றியதுடன், தற்கொலை செய்து கொண்டவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



from Latest News https://ift.tt/xRSFbA9

Post a Comment

0 Comments