Doctor Vikatan: எண்ணெய் குளியல் எடுக்கும்போது ஷாம்பூ பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில், கூந்தலுக்கு ஷாம்பூ உபயோகிக்கலாமா? பிசுபிசுப்பை எப்படிப் போக்குவது?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் எண்ணெய்ப் பசை முழுமையாக நீங்க சீயக்காய் அல்லது அரப்புத்தூள் தேய்த்துக் குளிக்கலாம். கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேம்பு, கடுக்காய், நெல்லி ஆகிய மூலிகைகளைக் காயவைத்துத் தயாரிக்கப்படும் பஞ்சகற்ப குளியல் பொடியையும் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப்பருப்பு சேர்த்த குளியல்பொடியை உடலுக்குப் பயன்படுத்தலாம். செயற்கையான ஷாம்பூ பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய்க் குளியலால் ஏற்பட்ட பிசுக்கு முழுமையாக நீங்காது. எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காம்பினேஷன் மூலிகைப் பொடிகள் மட்டுமே.

எண்ணெய்க் குளியல்

மூலிகைக் குளியல் பொடியோடு வாய்ப்பிருந்தால் பூவந்திக் கொட்டைகளையும் தேய்த்து, நுரை பொங்க, எண்ணெய்ப் பிசுக்கை நீக்க முயலலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/kZPtXir

Post a Comment

0 Comments