பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரரான பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 82 வயதுடைய பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அவ்வப்போது புற்றுநோய் பாதிப்புக்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார்.
அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பீலே அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயம் மற்றும் சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பீலேவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கால்பந்து உலகின் ஜாம்பவான் என போற்றப்படுபவர் பீலே பிரேசில் நாட்டு அணிக்காக gல சாதனைகளை செய்து அந்நாட்டின் அடையாளமாக திகழ்ந்திருக்கிறார். கால்பந்து வரலாற்றில் 1958, 1962, 1970- களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
உலக அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் ஆயிரத்துக்குத் அதிகமாக கோல்களை அடித்து சாதனையையும் புரிந்துள்ளார் பீலே.
FIFA உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம்பெற்றிருக்கிறார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பீலே இருந்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/eywWq6V
0 Comments