காலண்டரில் புதுமை... QR Code-உடன் டெய்லீ ஷீட் தயாரித்து அசத்தல்!

வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கேற்க தினசரி காலண்டரிலும் புதுமை புகுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், QR Code உடன் தயாரிக்கப்பட்டுள்ள தினசரி காலண்டர், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2022ம் ஆண்டு நிறைவடையும் தருவாயில், நாமெல்லாம் 2023ம் ஆண்டை வரவேற்கத் தயாராகி வருகிறோம். புத்தாண்டு பிறக்கிறது என்றாலே இனிப்பு, கேக், வாழ்த்து பரிமாற்றங்களோடு டைரி, காலண்டர்களும் பரிசளிக்கப்படுவது வழக்கம், அதுதவிர கடைகளில் விலைக்கு காலண்டர்கள், டைரிகள் விற்படுகின்றன.

மாதிரிப்படம்

மாறிவரும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப காலண்டர்களிலும் பல புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் அச்சிடப்பட்ட காலண்டர்கள் வரவேற்பை பெற்றன.

அவ்வகையில் இம்முறை, QR Code உடன் 2023ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரித்து அசத்தியுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள். தினசரி காலண்டரில் முக்கியமான நாட்களில், QR Code அச்சிடப்பட்டிருக்கும். நமது மொபைன்போனில் அதனை ஸ்கேன் செய்தால் போதும்... அந்த நாளில் என்ன விசேஷம், சிறப்புகள் என்ன என்பது உள்ளிட்ட விவரங்களுடன் இரண்டு நிமிட வீடியோவாக நாம் பார்க்கலாம்.

ஒருவேளை, ஒரேநாளில் இரண்டு விஷேசங்கள் என்றால், தினசரி காலண்டரின் அன்றைய நாளில் இரண்டு QR Code இடம் பெற்றிருக்கும். தனித்தனியே அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம், இரு விஷேசங்களின் சிறப்புகளையும் நமது மொபைல் போனில் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

தினசரி காலண்டர்

அதன்படி, 2023ம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள தினசரி காலண்டரில் 305 QR Code இடம் பெற்றிருப்பதாக, அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்களின் இத்தகைய புதுமையான முயற்சி, பலரையும் கவர்ந்துள்ளது. இது, நிச்சயம் வரவேற்கத்தக்க மாற்றம் என்று பலரும் இம்முயற்சியை வரவேற்றுள்ளனர்.



from Latest News https://ift.tt/zwhpJA5

Post a Comment

0 Comments