``அனுமதியின்றி பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை!" - ரஜினிகாந்த் வழக்கறிஞர் நோட்டீஸ்

ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்தின் `ஜெயிலர்' படம் குறித்த அறிவிப்புகள் நாளுக்குநாள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், `வர்த்தகரீதியில் அனுமதியின்றி ரஜினிகாந்தின் பெயர், குரல், படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜெயிலர்; ரஜினி

இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டிருக்கும் வக்கீல் நோட்டீஸில், ``ரஜினிகாந்தின் பெயர், குரல், புகைப்படம் ஆகியவை சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு, அவரின் சூப்பர் ஸ்டார் அடையாளத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் சிலர் பிரபலமாக முயல்கிறார்கள். இதுபோன்று அவரின் அனுமதியில்லாமல், சமூக வலைதளங்கள், பிற தளங்களில் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் மட்டுமே தன்னுடைய பெயரை, குரலை, புகைப்படத்தை, அடையாளத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு அனுமதிக்காமல் இருக்கிறார்.

ரஜினி

எனவே அவரின் தனித்தன்மையை வர்த்தக பயன்பாட்டுக்கு யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



from Latest News https://ift.tt/TQLXC5U

Post a Comment

0 Comments