மும்பை: 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் திடீர் மாயமா? - திகைப்பில் ரயில்வே அதிகாரிகள்!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி சரக்கு ரயில் ஒன்று ஏற்றுமதிக்காக 90 கன்டெய்னர்களுடன் மும்பை வந்து கொண்டிருந்தது. ரயில் 4 அல்லது 5 நாள்களில் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் மும்பை துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை. சரக்கு ரயிலை அதிகாரிகள் நாசிக் வரை சரியாக கண்காணித்து வந்தனர். ரயில் நாசிக்கிலிருந்து கல்யாண் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கசாரா அருகிலுள்ள ஓம்பர்மாலி என்ற இடத்தில் திடீரென காணாமல்போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, ரயிலின் நடமாட்டத்தை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சரக்கு ரயில்

இந்தியன் ரயில்வே சரக்கு ஆபரேஷன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் சரக்கு எடுத்துச்செல்லப்படும் கன்டெய்னர் ரயில்களைக் கண்காணிக்கும். ஆனால், இந்தியன் ரயில்வே சரக்கு ஆபரேஷன் இன்ஃபர்மேஷன் சிஸ்டத்திலிருந்து இந்த சரக்கு ரயில் காணாமல்போய்விட்டது. கன்டெய்னர்களில் ஏற்றுமதிக்காக அரிசி, பேப்பர் பொருள்கள், ரசாயானம் போன்ற பொருள்கள் கொண்டுவரப்பட்டன. சரக்கு ரயில் காணாமல்போனதால் ரயில்வே அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி கிளியரிங் ஏஜென்ட்டுகள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இது குறித்து ஏற்றுமதியாளர் ஒருவர், ``ரயில்வே அதிகாரிகளின் கவனக்குறைவால், நாங்கள் சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மும்பை ரயில் நிலையம்

கன்டெய்னர்கள் காணாமல்போயிருப்பதால் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கன்டெய்னர்கள் என்னவானது என்பது குறித்து முழுமையாக விசாரிக்கவேண்டும். பொருள்கள் சரியான நேரத்தில் சென்றடையவில்லையெனில், ஏற்றுமதியும் எதிர்காலத்தில் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார். கன்டெய்னர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மேலாளர் சந்தோஷ் குமார் இது குறித்துப் பேசுகையில், ``சரக்கு ரயில் காணாமல்போனது உண்மைதான். ரயிலை கண்டுபிடிக்க முயன்றுக்கொண்டிருக்கிறோம். சில தவறுகள் காரணமாக ரயிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

கன்டெய்னர் கார்பரேஷனும், ரயில்வேயும் இணைந்து ரயிலை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார். சரக்கு ரயில் காணாமல்போயிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கசரா மும்பை அருகில்தான் இருக்கிறது. நாசிக்கிலிருந்து சில மணி நேரத்தில் மும்பை வந்துவிட முடியும். அப்படிம் ரயில்வே அதிகாரிகளால் எப்படி சரக்கு ரயிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அனைவருக்கும் வியப்பாகவே இருக்கிறது.



from Latest News https://ift.tt/WSIOgR3

Post a Comment

0 Comments