"ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் படம்" - மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை

ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களின் படத்தை அச்சிட வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபா அலுவலகத்தில் வீர் சாவர்க்கரின் 58-வது நினைவு தினம் நேற்று அணுசரிக்கப்பட்டது. அதில் ஹவன பூஜை உள்ளிட்ட சில சடங்குகள் நடைப்பெற்றது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த இந்து மகாசபையின் தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா, "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கர் ஒரு சிறந்த வரலாற்றுப் புரட்சியாளர்” எனப் பேசினார்.

காந்தி

மேலும், அந்தக் கூட்டத்தின் நிறைவில் இந்து மகாசபா சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், "நாடாளுமன்ற வளாகத்திற்குச் செல்லும் சாலைக்கு சாவர்க்கரின் பெயரை மாற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர் சவார்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும். இதுதான் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னாள் தலைவருமான சாவர்க்கருக்கு மோடி அரசின் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



from Tamilnadu News https://ift.tt/DHz5A61

Post a Comment

0 Comments