சேலம், மேட்டூர் பெரிய சோரகை பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன்- விக்னேஷ். மிகவும் நெருக்கமான நண்பர்களான இவர்கள், கடந்த 2021-ம் ஆண்டு தாண்டவன் வளவு பகுதியில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றனர். அதாவது விறகு பொறுக்கிக் கொண்டிருந்த மூதாட்டியை, கீழே தள்ளி சேலையால் அவரின் முகத்தை மூடி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கிசிச்சைப் பெற்று வந்தார். இதையடுத்து, அவர் போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சீனிவாசன், விக்னேஷ் ஆகிய இருவரை ஓமலூர் போலீஸார் கைதுசெய்தனர்.
பாலியல் தொந்தரவுக்கு ஆளான மூதாட்டி எடப்பாடி நீதித்துறை நடுவர் முன் ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதனடைப்படையில் இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சிறையிலடைக்கப்பட்ட இளைஞர்கள் சீனிவாசன், விக்னேஷ் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். இதையடுத்து, தாக்கல் செய்த மனுக்கள் சேலம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தபோது, புகார் கொடுத்த மூதாட்டிக்கு வயதாகி வருவதால் வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சம்பந்தப்பட்ட சீனிவாசன், விக்னேஷ் ஆகிய இருவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
from Latest news https://ift.tt/8wThnpo
0 Comments