கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 8 நாள்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் நச்சுப்புகை பரவியது. 30 தீயணைப்பு வகனங்கள், 125 ஊழியர்கள். 12 ஹிட்டாச்சி இயந்திரங்கள் உதவியுடன் தீ அணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் நேவி, ஏர்போர்ஸ் மூலம் தீ அணைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. நிமிடத்துக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குப்பை மேடுகளில் இருந்து புகை மண்டலம் எழுந்துவருகிறது. குப்பை மேட்டில் புகையை கட்டுப்படுதும் விதமாக ஹிட்டாச்சி எந்திரங்கள் மூலம் குப்பைகளை கிளறி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். ஏற்கனவே அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொச்சி மாநகராட்சி, வடவுக்கோடு, புத்தன்குருசு, கிழக்கம்பலம் ஆகிய கிராம பஞ்சாயத்துகள், திருக்கக்கரை, திருப்பூணித்துறை, மரட் ஆகிய 3 நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கு தீப்பிடித்த நிலையில், கொச்சி மாநகரத்தில் 72 வார்டுகளில் உள்ள குப்பைகளை ஆங்காங்கே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரமே மோசமான நிலையில் உள்ளது. குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை கலெக்டராக இருந்த ரேணு ராஜ் கவனித்து வந்தார்.
இதற்கிடையே குப்பைக்கிடங்கு தீ எரிவது குறித்து தாமாக முன்வந்து கேரள உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. `இந்த விஷயத்தில் மறைந்துநிற்க வேண்டாம்’ என நீதிமன்றம் கலக்டரையும் விமர்சனம் செய்திருந்தது.
இந்த நிலையில் உலக மகளிர் தினமான நேற்றுமுந்தினம் கலெக்டர் ரேணுராஜ் திடீரென வயநாடு கலெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். எர்ணாகுளத்துக்கு கலெக்டராக என்.எஸ்.கே உமேஷ் நியமிக்கப்பட்டார். இடம் மாறி செல்வதற்கு முன்பு எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரின் முகநூல் பக்கத்தில் கலெக்டர் ரேணுராஜ் மகளிர்தின வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
அந்த வாழ்த்தில், "நீ ஒரு பெண் என யாராவது சொன்னால், நிச்சயம் பெருமைதான். ஆனால், ஆனால், நீ வெறும் பெண் என யாராவது கூறினால், அப்போதுதான் போராட்டம் தொடங்கும்" என பதிவிட்டிருந்தார். குப்பைக்கிடங்கு தீயை கட்டுப்படுத்தும் விவகாரத்தில், ரேணு ராஜ் ஒரு பெண் என்பதால் டார்கெட் செய்யப்பட்டார் என்றும் அவர் திறமையை மட்டம்தட்டும் விதமக இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பேசப்படும் நிலையில், அதனை மறைமுகமாக குறிக்கும் விதமாக ரேணு ராஜ் பதிவிட்டுள்ளதாக விவாதங்கள் எழுந்திருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/KPQ4TuB
0 Comments