புனேயில் சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்தவர் சுதீப் கங்குலி(44). இவருக்கு பிரியங்கா(40) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருந்தனர். சுதிப் சமீபத்தில் சொந்த தொழில் செய்வதற்காக தனது வேலையை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் வசிக்கும் சுதிப் சகோதரர், சுதிப்பை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் புனேயில் வசிக்கும் மற்றொரு நண்பரை தொடர்பு கொண்டு சுதிப் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

அந்த நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. இதையடுத்து மூவரையும் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சுதிப் போன் அவரின் வீட்டிற்குள் இருப்பது தெரிய வந்தது. உடனே மாற்று சாவி மூலம் வீட்டு கதவை திறந்து பார்த்த போது உள்ளே சுதிப் தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். அவரின் மனைவி மற்றும் 8 வயது மகன் இறந்து கிடந்தனர். அவர்களது முகத்தில் பிளாஸ்டிக் பேக் கட்டப்பட்டு மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டு இருந்தனர். மூவரின் உடல்களையும் மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை இல்லாமை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புனே தற்போது தகவல் தொழில் நுட்ப நகரமாக விளங்குகிறது. ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் புனேயில் தங்கி வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/yRuOF0f
0 Comments