தேர்தல் பத்திரங்கள் நன்கொடை விவகாரம்; பாஜக-வைச் சாடிய ப.சிதம்பரம்

தேசியக் கட்சிகள் கடந்த நிதி ஆண்டில் பெற்ற நன்கொடை குறித்த தகவல்களை, தேர்தல் ஆணையம் தனது வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்தத் தரவுகளின்படி, 2020-2021-ம் நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.752 கோடியை நன்கொடையாகப் பெற்றிருந்தது. கடந்த 2021-2022 நிதி ஆண்டில் அது 154 சதவிகிதம் அதிகரித்து, பா.ஜ.க ரூ.1,917 கோடி நன்கொடை பெற்று முதலிடம் பிடித்தது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், `இதுவரை விற்கப்பட்ட ரூ.12,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில் பெரும்பாலானவை கார்ப்பரேட் நிறுவனங்களால் பா.ஜ.க-வுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இதுவரை ரூ.12,000 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களால் வாங்கப்பட்டு, பெயர் குறிப்பிடாமல் பா.ஜ.க-வுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன.

மோடி, அமித் ஷா

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜனநாயகத்தை நேசிப்பதால்தான் வெளிப்படையற்ற தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. கார்ப்பரேட் நன்கொடை என்பது கடந்த ஆண்டுகளில் தங்களுக்குக் கிடைத்த பல உதவிகளுக்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும். இது ஒரு நேர்த்தியான ஏற்பாடு. உதவிகள் அமைதியாக செய்யப்படுகின்றன. வெகுமதிகள் ரகசியமாகப் பெறப்படுகின்றன. எங்கள் அநாமதேய ஜனநாயகம் வாழ்க" எனப் பதிவிட்டிருக்கிறார்.



from Tamilnadu News https://ift.tt/DrUXoZt

Post a Comment

0 Comments