"இந்தியாவுக்கு சோசியலிசம் தேவையில்லை... ராம ராஜ்ஜியம் தான் தேவை!" - யோகி ஆதித்யநாத்

2023-24-ம் ஆண்டுக்கான உத்திரப் பிரதேச பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்திரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்," சோசியலிசம் இல்லாமல் ராமராஜ்யம் சாத்தியமில்லை" என்று பேசினார். அதற்கு பதிலளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்த நாடு ராம ராஜ்ஜியத்தின் மூலம் மட்டுமே இயக்கப்படும். இந்த பட்ஜெட் ராமராஜ்ஜியத்தின் அடிக்கல்லாக இருக்கும். கும்ப மேளாவை ஒரு தனித்துவமான நிகழ்ச்சியாக மாற்ற பட்ஜெட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.

உலகில் எங்கும் சோசியலிசம் செழிப்பை கொண்டு வரவில்லை. சோசியலிசம் ஒரு மாயை. அது பணக்காரர்களை ஏழையாக்குகிறது, ஏழைகளை அடிமைகளாக மாற்றுகிறது, அறிவுஜீவிகளை முட்டாள்களாக மாற்றுகிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. சோசலிசம் என்பது மிகப்பெரிய பாசாங்குத்தனம். இந்தியாவுக்கு சோசலிசம் தேவையில்லை. உத்தரப்பிரதேசம் ராமராஜ்ஜியத்தின் பூமி, அது இந்த உணர்வோடு முன்னேறி வருகிறது.

யோகி ஆதித்யநாத்

பொருளாதார வளம், வளர்ச்சி சார்ந்த சமூகம் மற்றும் அரசியல் ஒருமைப்பாட்டின் உருவாக்கம் மட்டுமே ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் மகிழ்ச்சியைத் தரும். சோசியலிசத்தில் பல வகைகள் உள்ளன. ஜனநாயக சோசலிசம், முற்போக்கு சோசலிசம் மற்றும் குடும்ப சோசலிசம் இதில் எந்த சோசியலிசத்தால் மாநிலத்தின் நலனை காக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



from Tamilnadu News https://ift.tt/EmGRKqX

Post a Comment

0 Comments