Election Results Live: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா - `ஆட்சியை கைபற்றப்போவது யார்?’ - தேர்தல் முடிவுகள்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா - தேர்தல் முடிவுகள்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. திரிபுரா மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), அதாவது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரையில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), ஆட்சி நடைபெறுகிறது. இந்த 3 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் கடந்த மாதம் 16-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் கடந்தமாதம் 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மேகாலயா மாநிலத்தில் சோகியோங் என்னும் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.



from Tamilnadu News https://ift.tt/filsnZ4

Post a Comment

0 Comments