தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு
கேரளாவில் 1924 ஆம் ஆண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக்கூடாது என்ற இருந்த தடைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த சீர்திருத்தவாதிகள், கைது செய்யப்பட்டனர். அந்த கைது நடவடிக்கை காரணமாக போராட்டம் நின்று விடக்கூடாது என்று நினைத்த பெரியார் வைக்கம் பகுதிக்குச் சென்று போராடினார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களையும் அழைத்து சென்று போராடினார்.
மாண்புமிகு கேரள மாநில அமைச்சர் திரு. சாஜி செரியன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து 1.4.2023 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசால் இணைந்து நடத்தப்படவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். pic.twitter.com/dVdktVzsQd
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 22, 2023
அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப்போகிறது அதன் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. கேரளா அரசு சார்பில் வைகோ நூற்றாண்டு விழா வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 603 நாள்கள் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவினை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார். இக்கடிதத்தை கேரளா அமைச்சர் ஷாஜி செரியன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் கைது!
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தது இலங்கை கடற்படை. மீன்பிடிக்கப் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்
from Tamilnadu News https://ift.tt/yWgvzId
0 Comments