மூடப்படும் மெக்டொனால்டு நிறுவனங்கள்; தயாராகும் பணிநீக்க பட்டியல்... கலக்கத்தில் ஊழியர்கள்!

அமெரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மெக்டொனால்டு நிறுவனம் தற்காலிகமாக மூடியதோடு, தனது ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை தயார் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஆள்குறைப்பு (Layoff)

அமெரிக்காவின் மெக்டொனல்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் தரப்பில், கடந்த வாரம் ஒரு மெயில் வந்துள்ளது.

அதில், ஊழியர்கள் திங்கள் முதல் புதன் கிழமை வரை வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த வாரம் திட்டமிடப்பட்ட அனைத்து மீட்டிங்களையும் ரத்து செய்யுமாறும் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் பணிநீக்கங்கள் பற்றிய செய்திகளை வழங்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களின் அளவை மதிப்பாய்வு செய்வதாக நிறுவனம் அறிவித்து இருந்தது. இது சில பகுதிகளில் ஊழியர்களின் விரிவாக்கத்துக்கும், சில பகுதிகளில் பணிநீக்கத்துக்கும் வழிவகுக்கும் என நிறுவனம் தெரிவித்து இருந்தது.

French fries

இந்நிலையில், மெக்டொனால்டு நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் தற்காலிகமாக மூடியதோடு, ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பைத் தயார் செய்து வருகிறது.

ஆனால், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. பணிநீக்கங்கள் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



from Latest news https://ift.tt/G4JeDMC

Post a Comment

0 Comments