`காங்கிரஸ் தன்னை சரி செய்து கொள்ள வேண்டும்'
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் பிரதமரும் ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெறும். நாங்கள் பிரித்தாலும் கொள்கை அடிப்படையில் ஓட்டு கேட்கவில்லை. அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படையில் ஆதரவு கேட்கிறோம். தேசிய கட்சிகள் பெரிய திட்டங்களை இங்கு செயல்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள். அவர்களின் நாடகம் மற்றும் பொய்களை மக்கள் பார்த்துள்ளார்கள்.
பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். நம் நாட்டில் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் விஷயத்தில் காங்கிரஸ் முதலில் தன்னை சரி செய்து கொள்ள வேண்டும். இன்றைக்கு எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. நாட்டுக்கு தலைமை தாங்கும் திறன் கொண்ட தலைவர்கள் அதிகமாகி உள்ளனர். ராகுல் காந்தி பதவி நீக்கம் குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் அவரின் பதவியை தவித்து நீக்கம் செய்தது துரதர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்
from Tamilnadu News https://ift.tt/QdPx80l
0 Comments