`எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை’ - தமிழக அரசு அனுமதி
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய நிலையில், விசாரணை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2017- 21 காலகட்டத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டது. அதில்தான் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/2lTpQKr
0 Comments