தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி அருகே உள்ள வளைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனியாண்டி (56). மேலும் அதே ஊரைச் சேர்ந்தவர் பகவதி ராஜ் (55). தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமி அவ்வப்போது நடுக்கத்துடன் இருந்ததை அறிந்த அவரின் தாயார் இது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்தே கூலித் தொழிலாளி முனியாண்டி வடை வாங்கித் தருவதாக கூறி சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அதே போல ஆசிரியர் பகவதி ராஜ், சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்தது தெரியவந்தது.
சிறுமியிடம் நடத்திய விசாரணையின் போது, முனியாண்டி, பகவதிராஜை போல மற்றொரு நபரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அவர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முனியாண்டி, பகவதிராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு வடை வாங்கித் தருவதாகக் கூறி தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news https://ift.tt/lQu9hVm
0 Comments