வேளாண் துறை அறிமுகப்படுத்திய ஆந்திரா நிலக்கடலை... விவசாயிகளுக்கு எந்த வகையில் பயன் தரும்?

விவசாயிகள் லாபபெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக 'கதிரி லேபாக்‌ஷி 1812' என்ற புதிய நிலக்கடலை ரகம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட கிராமங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ரக நிலக் கடலையைத் தமிழக விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

கதிரி லேபாக்‌ஷி 1812 | நிலக்கடலை

ஆந்திர மாநிலம், கதிரி நகரிலிருக்கும் ஆச்சார்யா என்.ஜி.ரங்கா விவசாயப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேளாண் விஞ்ஞானி முனைவர் கே.எஸ்.எஸ்.நாயக் என்பவர் இந்த ரகத்தை உருவாக்கி, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தினார். இவர், வேளாண்மைத் துறையில் 23 ஆண்டுகள் அனுபவமுடையவர்.

இந்த புதிய ரகம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்ட கிராமங்களில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இதுகுறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

அவ்வகையில், காட்டுப்பாளையம் கிராமத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:

விவசாயிகள் நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற வேண்டும். 'கதிரி லேபாக்‌ஷி 1812' வகை நிலக்கடலை அதிக மகசூல் தரக்கூடியது. எனவே மானாவாரி சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேளாண் துறை சார்பில் புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, வறட்சியை தாங்கி வளரும். மானாவாரியில், 12 நாட்கள், இறவையில் 122 நாட்களுக்கு ஏற்றது. அதிக மகசூல் தரக்கூடியது. எக்டருக்கு, 5,000 கிலோ வரை மக்குல் கிடைக்கும்.இதில், 51 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது, நல்லத்தரமான எண்ணெய் கிடைக்கும்.  மேலும் 28 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத திறன் கொண்டதால் இலைப் புள்ளி நோய் தாக்காது, இதனால் பயிர் பாதுகாப்பு, மருந்து செலவு குறையும்” என்றார்.

கதிரி லேபாக்‌ஷி 1812 ரக நிலக்கடலை

கதிரி லேபாக்‌ஷி 1812 ரக நிலக்கடலையில் உள்ள சிறப்பம்சம் குறித்து தமிழகத்தில் அந்த ரக நிலக்கடலை விதை விற்பனை செய்யும் சேகர் கூறுகையில்,

``கதிரி ரக நிலக்கடலை அதிகநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அதிக மகசூல் தரக்கூடியது. எந்தவிதமான பூச்சிக்கொல்லியும் உபயோகப்படுத்த தேவையில்லை. இலைப் புள்ளி நோய் தாக்கவே தாக்காது. மொட்டு அழுகல் நோயும் வராது. இந்த நிலக்கடலையில் 50 சதவிகிதம் நல்லத்தரமான எண்ணெய் கிடைக்கும். நிறைவுற்ற கொழுப்பு அமிலம் 20 சதவிகிதம் குறைவாக இருப்பதால், இதயநோய் வராது. மேலும், உடல் நலத்துக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமிருக்கிறது’’ என்றார்.



from Latest news https://ift.tt/zXCxw4S

Post a Comment

0 Comments