`முதல்வர் ஏக்நாத், அதானியுடன் சரத் பவார் திடீர் ஆலோசனை’ - மகாராஷ்டிரா அரசியலில் என்ன நடக்கிறது?!

மகாராஷ்டிரா மகாவிகாஷ் அகாடி என்ற கூட்டணியை சரத் பவார் உருவாங்கினார். இந்த கூட்டணி காரணமாக 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வால் ஆட்சிக்கு வர முடியாமல் போனது. தற்போது சிவசேனா இரண்டாக உடைந்ததால் அதன் மூலம் பா.ஜ.க ஆதரவு ஆட்சி வந்திருக்கிறது. இச்சம்பவத்திற்கு பிறகு சரத் பவாரின் செயல்பாடுகள் மர்மமாகவே இருக்கிறது. திடீரென கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால் தனது முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார். அவரின் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரும் பா.ஜ.க-வில் சேரப்போவதாக செய்திகள் வெளியானது.

அச்செய்தி தற்காலிகமாக அடங்கி இருக்கிறது. புதிய திருப்பமாக சரத் பவார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அரசு இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சரத் பவார் சந்தித்து பேசியிருக்கிறார். மும்பை மராத்தா மந்திர் அம்ரித் மஹோத்சவ் விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுக்க சென்றதாக சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மராத்தி திரைப்படத்துறையினர் மற்றும் நாடக கலைஞர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பேச அவர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக சரத் பவார் குறிப்பிட்டுள்ளார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாகவும் தெரிகிறது.

இச்சந்திப்பு முடிந்தவுடன் சரத் பவாரின் இல்லத்தில் தொழிலதிபர் அதானி, சரத் பவாரை சந்தித்து பேசினார். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு குழுவினருடன் அதானி சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்திருந்தார். அவர்களைத்தான் அதானி சரத் பவார் இல்லத்தில் சந்தித்ததாக தெரிகிறது. ஏற்கனவே அதானி தனது கம்பெனி பங்குகளில் முறைகேடு செய்திருப்பதாக வந்த புகார் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கவேண்டும் என்று கோரிய போது, சரத்பவார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சரத் பவார் - கெளதம் அதானி

அப்போதும் அதானி சரத் பவாரை சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் எப்போதும் தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டு வருகிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்று பேசப்பட்டு வரும் நிலையில், சரத் பவாரின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளின் அரசியலில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.



from Latest news https://ift.tt/NRrlJyg

Post a Comment

0 Comments