பழஙகடத தழலளமத சறநர கழதத தனபறததல; பரவம அதரசச வடய- வலககம எதரபப

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின தொழிலாளிமீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் சமூகத்தில் கடும் எதிர்ப்பைக் கிளப்பி, பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. மேலும் இந்த வீடியோ மூலம், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் சித்தியில் கூலி வேலை செய்துவரும் பழங்குடி இனத்தவர் என்றும், சிறுநீர் கழித்த நபர் பிரவேஷ் சுக்லா என்றும் அடையாளம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரவேஷ் சுக்லா மீது சித்தியில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 294, 504 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் குற்றம்சாட்டப்படும் பிரவேஷ் சுக்லா, பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

பிரவேஷ் சுக்லா, பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார் சுக்லா

அதை உறுதிப்படுத்தும் விதமாக பிரவேஷ் சுக்லாவும், பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார் சுக்லாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் பிரவேஷ் சுக்லாவைத் தனக்கு தெரியும் என்று ஒப்புக்கொண்ட எம்.எல்.ஏ கேதார் சுக்லா, தனக்கு மூன்று பிரதிநிதிகள் இருப்பதாகவும், ஆனால் அதில் ஒருவர் பிரவேஷ் சுக்லா அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

அதேபோல் இந்தச் செயல் எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளை வரவழைத்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருக்கிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் எதிர்கட்சித்த தலைவர் கமல்நாத், ``நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான செயலுக்கு இடமில்லை. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார். அதேபோல், மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், பழங்குடியின தலைவருமான விக்ராந்த் பூரியா, இத்தகைய செயலை `மிகவும் வெட்கக்கேடானது ' என்று விமர்சித்திருக்கிறார்.

பழங்குடியின தொழிலாளிமீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்

இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து சிவராஜ் சிங் சௌஹான் தன்னுடைய ட்விட்டரில், ``சித்தி மாவட்டத்தின் வீடியோ ஒன்று என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது. இதில் குற்றவாளியைக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், நடவடிக்கையில் அந்த நபருக்கெதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) போடுமாறும் உத்தரவிட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.



from Latest news https://ift.tt/wLodGmW

Post a Comment

0 Comments