Doctor Vikatan: கழநதகளயம பதககம மலசசககல... மலமளகககள பயனபடததவத பதகபபனத?

Doctor Vikatan: என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கிறது. என்னுடைய 4 வயதுக் குழந்தைக்கும் அந்தப் பிரச்னை இருக்கிறது. மலமிளக்கிகள் சாப்பிடுவது பழக்கமாக மாறிவிடுமா.... இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்

குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர்

ஒரு வாரத்தில் எத்தனை நாள்களுக்கு உங்களுக்கு மலச்சிக்கல் பாதிக்கிறது என்பதைக் குறிப்பெடுத்து வையுங்கள். பெரியவர்கள் என்றால் வாரத்துக்கு 3 முறைக்கும் குறைவாகவோ, குழந்தைகளுக்கு 2 முறைக்கும் குறைவாகவோ மலம் கழிவதை மலச்சிக்கல் பாதிப்பு என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டு மாதங்களுக்கு மேலும் மலச்சிக்கல் தொடர்வதை தீவிர மலச்சிக்கல் என்போம். மலச்சிக்கலுடன் உடல் எடை குறைவது, மலத்துடன் ரத்தமும் சேர்ந்து வெளியேறுவது போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகி, காரணங்கள் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவானது சரியாக செரிமானமாக வேண்டும். இந்தச் செயல் மந்தமாகலாம் அல்லது தடைப்படலாம்.

புற்றுநோய் கட்டி இருந்தாலும் அது தடைப்படலாம். புற்றுநோய் இல்லாத நிலையில் சில பெண்களுக்கு கர்ப்பப்பையானது பெரிதானதன் விளைவாக அது சிறுகுடல் பகுதியை அழுத்துவதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட அளவுக்கதிகமாக பால் குடிக்கும் பழக்கமும் ஒரு காரணம். குழந்தைகளுக்கு பால் நல்லது என்ற எண்ணத்தில் பெற்றோர், கட்டாயப்படுத்தி நிறைய பால் குடிக்கவைப்பார்கள். ஒரு வயதுக்குப் பிறகு 400 மில்லிக்கு அதிகமாக பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

தைராய்டு பிரச்னை

குழந்தைகளுக்கு தைராய்டு பாதிப்பு இருந்தாலும் மலச்சிக்கல் வரலாம். எனவே குழந்தைகள் தொடர்ச்சியாக மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்பட்டால் மருத்துவரை அணுகி முக்கியமான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

சில குழந்தைகளுக்கு ஆசனவாயில் வெடிப்பு இருக்கலாம். அதனால் ஏற்படும் வலி காரணமாக சில குழந்தைகள் மலத்தை அடக்கிக் கொள்வார்கள். ஆனால் பெற்றோர் அதை மலச்சிக்கல் என புரிந்துகொள்வார்கள். ஆசனவாய் வெடிப்புக்கு சிகிச்சை கொடுத்து சரிசெய்தாலே மலச்சிக்கல் பிரச்னை சரியாகிவிடும்.

இடம், நேரம், உணவுப்பழக்கம் போன்றவை மாறினால்கூட சிலருக்கு மலச்சிக்கல் வரலாம். மலம் வந்தாலும் வராவிட்டாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கழிவறையில் உட்கார வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் மலச்சிக்கல் வரலாம் என்பதால் அவற்றையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

மலச்சிக்கல் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தினமும் 3- 4 காய்கறிகள், 2- 3 பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிப்ஸ், பிஸ்கட் போன்றவை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கல்

ஜூஸ் நல்லது என பழங்களை ஜூஸாக்கி கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுக்கும்போது பழங்களில் உள்ள நார்ச்சத்து நீங்கிவிடும். இப்படி எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் கடைகளில் கிடைக்கும் Isabgol Husk என்பதை தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம். அது மலத்தை இளக்கி வெளியேற்றும்.

மருந்துக் கடைகளில் கிடைக்கும் மலமிளக்கிகளையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து அவற்றை எடுப்பது பழக்கமாக மாறிவிடுமோ என பயப்பட வேண்டாம். மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு எடுக்கும்போது அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடற்பயிற்சிகள் செய்வதும் மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/odjRmrU

Post a Comment

0 Comments