Tamil News Live Today: தஞ்சை, திருச்சி, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தஞ்சை, திருச்சி, நெல்லை உட்பட 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ சோதனை!

என்.ஐ.ஏ

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், 5 பேர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 24 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில், மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



from Latest news https://ift.tt/lXDoWGz

Post a Comment

0 Comments