வெல்டன் TCS.. அசத்தலான காலாண்டு முடிவு; பங்கு விலை உயர இதுதான் காரணமா? பொருளாதாரம், பணம், பங்கு-11

பங்குச் சந்தை வெற்றிநடை தொடர்கிறது. அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியச் சந்தைகளில் பணத்தைக் கொட்டிவருகிறார்கள். 2023 ஜூலை இரண்டாவது வாரம் வரை மட்டும் கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வந்திருக்கிறது.

வெளிநாட்டு, உள்நாட்டுப் பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்வதும் பங்கு விலைகள் உயர்வதும் இப்போதைக்குத் தொடரும் என்பது போல சமிஞ்சைகள் இருக்கின்றன. இந்த வெற்றி ஊர்வலத்தில் சேர்ந்து புதிய உற்சாகத்தைக் கொடுத்திருப்பது, டி.சி.எஸ் பங்குகள்.

காலாண்டு முடிவுகள்

டி.சி.எஸ் என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.. அந்த நிறுவனம் அதனுடைய 2023- 24 முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை 12.7.23 அன்று வெளியிட்டது. நிறுவனத்தின் மொத்த வியாபாரம் 17 சதவிகிதமும், நிகர லாபம் 13 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது. சந்தை அவ்வளவு எதிர்பாராத்திருக்கவில்லை. பெரிய அதிர்ச்சி, இன்ப அதிர்ச்சி.

உடன், 13.7.23, வியாழன் அன்று டி.சி.எஸ் பங்கு விலைகள் 3% உயர்வு, வெள்ளி அன்று மற்றொரு 5% என 3000 ரூபாய்க்கும் அதிகமான விலை விற்கிற டி.சி.எஸ் பங்குகள் இரண்டே நாள்களில் 7.5 சதவிகிதததிற்கும் அதிகமாக விலை உயர்ந்திருக்கிறது. சில தரகு நிறுவனங்கள் டி.சி.எஸ் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. .

டி.சி.எஸ் என்ற ஒரு நிறுவனம் சிறப்பாக வியாபாரம் செய்து கூடுதலாக லாபம் சம்பாதித்திருப்பது தெரிந்தவுடன் அந்த நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது சரி. ஆனால், டி.சி.எஸ் பங்குகள் விலை உயர ஆரம்பித்த உடனேயே இன்போசிஸ் போன்ற மற்ற தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவன பங்கு விலைகளும் உயர்ந்தன. அப்படி உயர்வதற்கு அந்த நிறுவனங்கள் சார்ந்த தனிப்பட்ட காரணங்கள் ஏதும் இல்லாமலே!

அதுதான் டி.சி.எஸ்.

அது ஒரு தனிப்பட்ட நிறுவனம் மட்டும் அல்ல; தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களிலேயே முன்னோடியும் மிகப் பெரியதுமான ’தலைவர்’ போன்ற நிறுவனம். ’இன்ண்டஸ்ரி லீடர்’, ‘ஐ.டி லீடர்’ என்பார்கள்.

பங்கு முதலீடு

‘யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, ’ஆகா, டி.சி.எஸ் நிறுவனம் இவ்வளவு லாபம் செய்திருக்கிறது. இதே போலதான் மற்ற ஐடி நிறுவனங்களும் லாபம் செய்திருக்கும் அவற்றின் நிதிநிலை முடிவுகள் வெளிவரும்போது விவரம் தெரியும். நாம் முன்கூட்டியே வாங்கிவிடுவோம்’ என்று பலரும் ஐடி துறை நிறுவன பங்குகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதான் இன்போசிஸ், ஹெச்.சி.எல் போன்ற பங்குகளின் விலை உயர்வுக்குக் காரணம்.

டி.சி.எஸ்-ன் ‘நல்ல ரிசல்ட்’டின் தாக்கம் அதோடு நிற்கவில்லை. 65 ஆயிரத்துக்கும் மேல் சென்றிருந்த சென்செக்ஸ்-ம் 19500 மேல் போயிருந்த நிஃப்டியும், அதிகம் உயர்ந்துவிட்டது, இனியும் உயர முடியுமா என்று தயங்கிக்கொண்டிருந்த நிலையில், சென்செக்ஸ் 66061 என்கிற உயர் அளவிற்கும் நிப்டியை 19550 என்ற உயரத்திற்குபோக வைத்திருப்பதும் டி.சி.எஸ் ரிசல்ட்தான் என்றால் அது தவறாகாது.

காரணம், சென்செக்ஸ்-ல் டி.சி.எஸ் பங்கின் ‘வெயிடேஜ்’ 5.13%, நிஃப்டியில் 4.93%. எனவே, டி.சி.எஸ் விலை உயர்ந்தால் பங்குச் சந்தை சுட்டிகள் இரண்டும் உயர்ந்துதான் ஆகவேண்டும். அதுவும் கிட்டத்தட்ட 5% கனம் உள்ள பங்கு விலை 7, 8% உயரும்போது.

இன்டெக்ஸ் உயர்ந்திருக்கிறது என்பது ஒரு செய்தி. சந்தைகளில் அது, ‘நல்ல சகுனம்’, ‘நல்ல சென்டிமெண்ட்’-ஆக பார்க்கப்படும் . அதனால் மற்ற பல பங்குகளின் விலைகளும் உயரும் அதுவும் நடக்கிறது.

கொரோனாவிற்குப்பிறகு, பணம்வீக்கம், பொருளாதாரமந்தம் ஆகியவற்றால் ஐ.டி துறைக்கு வியாபார வாய்ப்புகள் இருக்காது என்ற அச்சம் இருந்தது. இப்பொழுது விலகிவிட்டது. அதை விலக்கியிருப்பதும் டி.சி.எஸ் நிறுவன ரிசல்ட்.

பங்கு விலை

தவிர, அமெரிக்காவில் பணவீக்கம் பயந்தளவிற்கு இல்லை. குறைகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, பெடரல் ரிசர்வ் இனி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து உயர்த்தாது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இனி அமெரிக்க நிறுவனங்கள் ஐ.டி துறையில் செலவு செய்வதைக் குறைக்காது என்று யூகிக்கிறார்கள். இது டி.சி.எஸ் போன்ற ஐ.டி நிறுவனங்களுக்கு வாய்ப்பு.செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் காரணமாக ஐ.டி நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்கிற அபிப்ராயமும் இப்போது மாறிஇருக்கிறது. பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் நுழைவதற்கு ஐ.டி நிறுவனங்களுக்கு வியாபார வாய்ப்புகளை தருவார்கள் என்பதும் டி.சி.எஸ் ரிசல்ட் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்தக் காரணங்களால், ’ஐ.டி துறை இப்போதைக்கு வேண்டாம்’ என்று நினைத்த முதலீட்டாளர்கள் மீண்டும் ஐ.டி பங்குகள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்; வாங்குகிறார்கள்

டி.சி.எஸ் 23-24 முதல் காலாண்டில் ரூ.11,074 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. அதன் காரணமாக, அந்நிறுவனத்தின் 365,92,44,25 ஒரு ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளும், சென்ற வார வியாழன் வெள்ளி என்ற இரண்டே நாட்களில், பங்கு ஒன்று ரூபாய் 217 உயர்ந்து டி.சி.எஸ் பங்கின் ’மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 75,762 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது.

வெல்டன் டி.சி.எஸ்....!



from Latest news https://ift.tt/ApuCI43

Post a Comment

0 Comments