சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்| ரேஷனில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை - News In Photos

வட மாநிலத் தொழிலாளர்களை தூய்மைப் பணியாளர்களாக நியமனம் செய்யக் கூடாது என்று கூறி, மயிலாடுதுறை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
சேலத்தில் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறிப்பதற்காக மனநல மருத்துவர் ஆலோசனை.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
விருதுநகர் பத்திர பதிவு அலுவலகத்தில் விடுமுறை நாளன்று கூடுதல் பதிவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தக் கூறி அறிவிப்பு ஒட்டப்பட்டதால்,பொதுமக்கள் போராட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிய வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குக்கி பழங்குடி சமூக மக்களுக்கு ஆதரவாக சென்னையில் வாழும் மணிப்பூர் மக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!
விருதுநகரில் நாட்டுப்புறக் கலைஞர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கீழ் பவானி பாசன வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சு. முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க., பொன்விழா மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டத்தி்ல் அ.தி.மு.க., அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
ஈரோடு, கொள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தக்காளி கிலோ ரூபாய் ஆறுபதுக்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol) துவக்கி வைத்து, RSP Cadets Manual-ஐ வெளியிட்டார்.
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 43-வது பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பர தட்டி விற்பனை செய்யும் வியாபாரிகள்.
தமிழ்நாடு முத்தரையா்கள் சங்கம் சார்பில் முத்தரையர்கள் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இணைக்க வேண்டி, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.


from Latest news https://ift.tt/rDV9W1T

Post a Comment

0 Comments