கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவைக்கு வந்தார். ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க வளாகத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிறுவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல்,
“தமிழக மக்கள் அனைவரையும் இணைக்கும் வகையில் இளம் தலைவரான பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திவரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இடம்பிடித்திருக்கிறது. உலக வரைபடத்தில் தமிழ்நாட்டை முன்னிறுத்த அண்ணாமலை உழைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஓர் உலகம் ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார். துரதிஷ்டவசமாக சில திராவிடக் கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையைச் செய்து வருகின்றன. மொழிரீதியாகவும், இனரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றனர். ஆனால், அண்ணாமலை நமது ஒற்றுமையை தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று வருகிறார்.
தமிழக மக்கள் பிரதமரோடும் அண்ணாமலையோடும் சேர்ந்து இருப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம். தமிழக மக்கள் ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க உறுதுணையாக இருப்பார்கள். ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை விலக்கி, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகம் இழந்த முன்னணி இடத்தை மீண்டும் பெற்றிடும்.
நான் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள ஜவுளி தொழில்துறையினரைச் சந்தித்து வருகிறேன். சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவை பல்வேறு விலை மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் நான் பெருமிதமாகக் கூறுகிறேன்.
நமது ஜவுளித்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவை ஜவுளித்துறையின் மையமாக உருவாகும் என உறுதியாக நம்புகிறேன். அதில் தமிழகத்துக்கு முக்கிய பங்கு இருக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/WB91sti
0 Comments