`குறையும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!' - சுட்டிக்காட்டிய ஜூ.வி; நடவடிக்கை எடுக்க அரசு உறுதி!

கடந்த ஜூ.வி இதழில், `குறையும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்! அரசியல் தலையீடுதான் காரணமா?' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

கடந்த பட்ஜெட்டில், ``தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.7,500 வழங்குவோம்" என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, `நான் முதல்வன்' போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.



from Latest news https://ift.tt/WeT4krp

Post a Comment

0 Comments