இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் பைக் வாங்க 1.25 லட்சம் ரூபாய் இருந்தாலும் போதவில்லை. ஆனால், இதைக் கொண்டு மார்க்கெட்டில் 125 – 150 சிசி பைக்குகளை அசால்ட்டாக ஓட்டிக் கொண்டு வரலாம். அப்படி ஒரு ஸ்டன்னிங்கான விலையில் அதிரடியாக ஒரு பைக் இறங்கியிருக்கிறது. இதை புத்தம் புதிய பைக் என்று சொல்ல முடியாது; ஆனால் புது பைக் என்று சொல்லலாம்.
SP160 என்றொரு 160சிசி கம்யூட்டர் பைக், ஹோண்டாவிலிருந்து லேட்டஸ்ட்டாக லாஞ்ச் ஆகியிருக்கிறது. இதை யூனிகார்ன் என்றும் செல்லமாகச் சொல்கிறார்கள். (வேற யாரு, நாமதான்!) ஏனென்றால், பார்ப்பதற்கு யூனிகார்ன் பைக் போலவேதான் இருக்கிறது இந்த SP160. ஆனால், இப்போது ஹோண்டாவின் SP125 இருக்கிறதல்லவா… அந்த பைக்கின் அண்ணனாக வந்திருக்கிறது இந்த SP160. இந்தப் புது அண்ணன் பைக்கை டெல்லியில் பார்வையிட்டு வந்திருக்கிறது நம் டீம். இது பற்றிச் சில பாயின்ட்களை லிஸ்ட்டாகப் பார்க்கலாம்!
-
இதன் அண்டர்பின்னிங், யூனிகார்ன் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் டைமண்ட் டைப் ஃப்ரேம் சேஸியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மேலும், இதன் முன்பக்க டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன். ஒரு காலத்தில் யூனிகார்னின் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை உச்சி மோந்தவர்களில் நானும் ஒருவன்.
-
ஒரு வித்தியாசம் – யூனிகார்ன் பைக்கில் 18 இன்ச் வீல்கள் இருந்தால், இதில் 17 இன்ச் வீல்கள்தான் இருக்கும். இதன் செக்ஷன் 80/100–17 மற்றும் 130/70–17 என்று கொஞ்சம் தடிமனான ரப்பர் ட்யூப்லெஸ் டயர்கள்.
-
அடிப்படை யூனிகார்ன் என்றாலும், இது லேட்டஸ்ட் SP125 பைக்கின் பெயரிலிருந்து அந்த SP–யை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதனாலேயே SP125–யைக் கொஞ்சம் ஜூம் பண்ணிப் பார்ப்பதுபோல் இருக்கிறது இந்த SP160. அந்த எல்இடி ஹெட்லைட், அதைச் சுற்றி இருக்கும் அக்ரெஸ்ஸிவ் ஆன கவுல், டேங்க்கில் இருக்கும் ஸ்கூப், ரியர் ஷார்ப் செக்ஷன் போன்றவற்றை உதாரணம் சொல்லலாம். ஆனால், டெயில் லாம்ப் யூனிக் டிசைன்.
-
இது 2 வேரியன்ட்களில் வரப் போகிறது. ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ். ஸ்டாண்டர்டில் 130 மிமீ பின் பக்க டிஸ்க்; டீலக்ஸில் 220 மிமீ பின் பக்க டிஸ்க் இருக்கும். இரண்டிலுமே 276 மிமீ முன் பக்க டிஸ்க் உண்டு. ஆனால், இதிலிருப்பது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ்தான். இந்த பைக்குக்கு டூயல் சேனல் எல்லாம் தேவையில்லை என்று நினைத்துவிட்டது ஹோண்டா. (பல்ஸரைப் பாருங்க ஹோண்டா!)
-
டேங்க் பார்ப்பதற்குப் பெருசாக இருந்தாலும், இதில் 12 லிட்டர் டேங்க். நடப்பு யூனிகார்னில் 13 லிட்டர் இருக்கும். இது யூனிகார்னைவிட 2 கிலோ எடை அதிகமாக இருக்கும். இதன் கெர்ப் எடை 141 கிலோ. ஹேண்ட்லிங் பண்ண ஓகேதான்! இதன் சீட் உயரம் 796 மிமீ. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 177 மிமீ. குழந்தை கொண்ட ஃபேமிலிக்குச் சரியாக இருக்கும். காரணம், இதன் சீட் நீளம் 594 மிமீ.
-
இதில் யூனிகார்ன் மற்றும் எக்ஸ்பிளேடு பைக்கில் இருக்கும் லேட்டஸ்ட் OBD-II நார்ம்ஸுக்கு அப்டேட் செய்யப்பட்ட 162.7 சிசி இன்ஜின் இருக்கும். இதன் பவர் 13.27bhp மற்றும் 14.6Nm டார்க் இருக்கும். சில பைக்குகளில் கிக் ஸ்டார்ட் கொடுக்கமாட்டார்கள். நல்லவேளை – இதில் கிக் ஸ்டார்ட் உண்டு. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான்.
-
இதில் முழுவதும் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உண்டு. இது எல்சிடிதான். இதில் ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப், டேக்கோ மீட்டர்கள்; கியர் பொசிஷன் இண்டிகேட்டர், மைலேஜ் சமாச்சாரம், பேட்டரி வோல்ட்டேஜ் விவரம் போன்றவை தெரியும். இதை ஓட்டிப் பார்த்தபிறகு இதன் ரியல் டைம் மைலேஜ் பற்றிய விவரம் தெரிய வரும்.
-
இந்த SP160 பைக்கின் Standard வேரியன்ட்டின் விலை 1,17,500. Deluxe மாடலின் விலை 1,21,900. ஆன்ரோடுக்கு வரும்போது இது சுமார் 1.40 லட்சம் வரலாம். விலை குறைவுதான்; ஆனால் வசதிகளும் குறைவாச்சே! பல்ஸர், அப்பாச்சி, எக்ஸ் பிளேடு, ஜிக்ஸர் – எப்பா… SP160–க்குப் போட்டி கொஞ்சம் டஃப்தான் பாஸ்!
from Latest news https://ift.tt/i2sOELz
0 Comments