உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது தன் ஜூனியரை வாதத்துக்கு அனுப்பிய வழக்கறிஞருக்கு நீதிமன்ற அமர்வு அபராதம் விதித்திருக்கும் சம்பவம் நீதிமன்ற வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, மனோஜ் மிஸ்ரா என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த வழக்கின் வழக்கறிஞருக்குப் பதில் அவரின் ஜூனியர் வழக்கறிஞர் ஆஜராகி, வழக்கின் முக்கிய வழக்கறிஞர் வர முடியாததால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர், ``எங்களை நீங்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நீதிமன்ற செயல்பாட்டில் உள்கட்டமைப்புச் செலவுகள் இருக்கின்றன. எனவே வாதாடத் தொடங்குங்கள்" என்றனர். அதற்கு, ``இந்த வழக்கில் எனக்கு எதுவும் தெரியாது. வாதாடுவதற்கான எந்த அறிவுறுத்தல்களும் ('Unprepared) எனக்கு வழங்கப்படவில்லை" என்று ஜூனியர் வழக்கறிஞர் கூறினார்.
அதன் பின்னர் நீதிமன்ற அமர்வு, ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே, வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்" என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் (Video Conferencing) நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். பிறகு, எந்தவோர் ஆவணமும், அறிவுறுத்தல்கள் இல்லாமல் ஜூனியர் வழக்கறிஞரை அனுப்பியது ஏன் என்று வழக்கறிஞரிடம் கேட்ட நீதிமன்ற அமர்வு, அவருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தது.
இது குறித்து நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில், ``ஒரு ஜூனியர் வழக்கறிஞர், எந்த ஆவணங்களும், அறிவுறுத்தல்களும் இல்லாமல் வாதத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர், வழக்கை நாங்கள் ஒத்திவைக்க மறுத்தபோது, வழக்கறிஞர் ஆஜரானார். வழக்குகளை இது போன்று நடத்த முடியாது. இது நீதிமன்றத்துக்கும், எந்த ஆவணமும் இல்லாமல் ஆஜரான ஜூனியர் வழக்கறிஞருக்கும் அவமதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் ரூ.2,000 டெபாசிட் செய்து அதற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/NTfG7oV
0 Comments