வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த Aditya-L1 | வீட்டுமனைகளாக மாறி வரும் பாசன பகுதிகள் - News In Photos

திருநெல்வேலி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவபட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை, நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர்.
புதுச்சேரி "டி.பி.எல்" லீக் கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை சபாநாயகர் செல்வம் அறிமுகப்படுத்தினார்.
நீலகிரி, ஊட்டியை அடுத்த முத்தொரை பாலடா பகுதியில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் கேரட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைப்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
கடலூர் காமியம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 வின்கலம் பி.எஸ்.எல்.வி சி 57 ராக்கெட் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட அனிச்சம்பாளையத்தில் ரூ.2.கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சியர். பழனி தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பாலசுப்பிரமணியம் கோயில் அருகே நீண்ட நாள்களாக பாதை அடைக்கப்பட்டு, சாக்கடைகள் மூடப்படாமல் இருக்கின்றன.
நாகர்கோவிலில் வீட்டுமனைகளாக மாறி வரும் விவசாய பாசன பகுதிகள்.
சாகர் பரிக்ரமா திட்டத்தின்கீழ் ராமநாதபுரம், திருப்பாலைக்குடியில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவினை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கொள்கையை ஆதரித்து புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு.
திருநெல்வேலி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவபட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட் குறித்து, நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தின் இயக்குநர் குமார் பள்ளி மாணவர்களுக்கு விளக்கினார்.
விருதுநகர் கல்லூரியில் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகை தந்து அங்கு நடைபெற்ற கோமாதா பூஜையில் கலந்துகொண்டார்.
ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்..!
ஆதியோகி கட்டுமானம் தொடர்பான பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் ஈஷாவிற்கு எதிரான அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகள் குறித்து விளக்கம் அளிப்பதாக, ஈஷா சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விருதுநகரில் மழை.
ராமநாதபுரத்திற்கு வருகை தந்த ஒடிசா மாநில ஆளுநர் பேராசிரியர் கணேசிலாலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மலர் கொடுத்து வரவேற்றார்.
வேலூர் உட்கோட்டம் காவல் நிலையத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரிக்க, சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.


from Latest news https://ift.tt/X4nIiE2

Post a Comment

0 Comments