விடுமுறையில் வந்த ராணுவ வீரர்... மணிப்பூர் வீட்டிலிருந்து கடத்தப்பட்டு கொலை - என்ன நடந்தது?

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் சிபாய் செர்டோ தாங்தாங் கோம் (Sepoy Serto Thangthang Kom). ராணுவத்தில் வீரராகப் பணியாற்றிய இவர், விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இம்பால் மாவட்டத்திலுள்ள குனிங்தேக் கிராமத்தில் இந்திய ராணுவ வீரரின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அது காங்போக்பி மாவட்டத்திலுள்ள லீமாகோங்கில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்புப் படையின் (டிஎஸ்சி, DSC) படைப்பிரிவைச் சேர்ந்த சிபாய் செர்டோ தாங்தாங் கோம் என அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை செய்த போலீஸார், ``இந்தச் சம்பவம் நிகழ்ந்த நாளான சனிக்கிழமை சிபாய், காலை 10 மணியளவில் ஆயுதமேந்திய மூன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டார் என இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒரே சாட்சியான அவரின் 10 வயது மகன் தெரிவித்தார். அதோடு அவர்கள் சிபாயை துப்பாக்கி முனையில் ஒரு வெள்ளைநிற வாகனத்தில் கடத்திச் சென்றதாக அவரின் மகன் கூறியிருக்கிறார்.

மரணம்

இந்த நிலையில் சிபாயை தேடிய போலீஸாருக்கு அன்று முழுவதும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை, இதனால் அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில்தான் ஞாயிறு காலை சுமார் 9:30 மணியளவில், இம்பாலுக்கு அருகில் குனிங்தேக் கிராமத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், சிபாயின் தலையில் ஒரு தோட்டா காயம் இருந்ததாக அவரின் சகோதரர், மைத்துனர் தெரிவித்ததையடுத்து, போலீஸார் அவரின் உடலைக் கண்டறிந்தனர்.

ராணுவத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ``சிபாய்க்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். மேலும், அவர் கொல்லப்பட்டதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கடினமான காலங்களில் அவரின் குடும்பத்துக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம். அவர் குடும்பத்தின் விருப்பப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்படும். அவரின் குடும்பத்துக்கு எல்லா வகையிலும் உதவ ராணுவம் ஒரு குழுவை அனுப்பியிருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/P3G2Rn7

Post a Comment

0 Comments