திருநங்கையிடம் அத்துமீறல்... கட்டையால் தாக்கியதில் டிரைவர் உயிரிழப்பு - சேலத்தில் பரபரப்பு!

சேலம், வாழப்பாடி அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் வாடகைக்கு கார் ஓட்டிவருகிறார். நேற்று முன்தினம் வாழப்பாடி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்துவரும் திருநங்கை நவ்யா என்பவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே குடிபோதையில் சதீஷ்குமார் நவ்யாவிடம் தனிமையில் வர வற்புறுத்தியிருக்கிறார். அப்போது நவ்யாவுக்கும் சதீஷுக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நவ்யா, அருகிலிருந்த உருட்டுக்கட்டையால் சதீஷ்குமாரைத் தலையில் தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் சதீஷ்குமார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சதீஷ்குமாரைக் கொண்டு சென்றனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார்.

கொலை

அதன் மூலம் வாழப்பாடி போலீஸார் நவ்யா மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று நவ்யாவும் அவருடைய நண்பரும் வாழப்பாடியிலுள்ள கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சதிஷ்குமாரும், அவருடைய நண்பர்களும் வந்திருக்கின்றனர். நவ்யாவிடம் சதிஷ்குமார், தங்கள் ஊரில் கோயில் திருவிழா இருக்கிறது. நடனமாடுவதற்கு வர முடியுமா என்று செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கியிருக்கிறார். பின்னர் நவ்யாவும், அவரின் நண்பரும் கோயிலிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிச் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த சதீஷ்குமார் நவ்யாவின் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறியிருக்கிறார். இதில், அருகில் இருந்த கட்டையைக்கொண்டு சதிஷ்குமாரின் தலையில் அடித்திருக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டே சதீஷ் வெளியில் ஓடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/9qcJKQO

Post a Comment

0 Comments