`இன்று செல்போன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிது' என்ற அளவுக்கு செல்போன் என்பது வாழ்கையின் அங்கம் ஆகிவிட்டது. தொலைத்தொடர்பை எளிதாக்கும் செல்போன்களில், நன்மைகளை போல, பல தீமையான விஷயங்களும் உள்ளன. அதிலும் ஆன்ட்ராய்ட் செல்போன்களின் புழக்கம் அதிகரித்தப்பிறகு, விரல் நுணியில் இணையதளங்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கு ஒன்று கேரளாவில் கவனம் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆலுவா காவல் நிலையம். 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் ஆலுவா போலீஸார் இரவு ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஆலுவா பாலத்துக்கு அருகே பொது இடத்தில் கறுக்குற்றி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
ரோந்து சென்ற ஆலுவா போலீஸார், அந்த சம்பவத்தை பார்த்துள்ளனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதுடன், பொது இடத்தில் வைத்து செல்போனில் ஆபாச வீடியோ பார்த்ததாக அவர்மீது வழக்கு பதிவும் செய்தனர்.
இந்த நிலையில் தன் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அந்த இளைஞர் மீதான வழக்கையும், அவர் மீதான தொடர் நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி வழங்கிய தீர்ப்பில், "பிறர் பார்க்காத வகையில் தனது செல்போனில் தனியாக ஆபாச வீடியோ பார்ப்பது சட்டரீதியாக தவறு என சொல்லமுடியாது. அது ஒருவருடைய பர்சனல் விஷயத்தில் தலையிடுவது போன்றதாகும். ஆபாச வீடியோவை பரப்புவதும், பிறருக்கு விநியோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும். டிஜிட்டல் யுகத்தில் இதுபோன்ற வீடியோக்கள் எளிதில் கிடைத்துவிடுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரல் நுணியில் அவர்களுக்கு இவை கிடைத்துவிடுகின்றன. ஆனால், சிறுவர்கள் இதுபோன்ற வீடியோக்களை பார்த்து அதற்கு அடிமை ஆகிவிடுறார்கள்" என நீதிபதி கூறியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/btLAaNK
0 Comments