புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால், ரொட்டி மற்றும் பழம் உள்ளிட்ட சத்தான உணவை வழங்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்துதான் முன்பு வழங்கி வந்தோம். அது மீண்டும் தொடரும். இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றுவதை வரவேற்கிறோம். பாரதநாடு பழம்பெரும் நாடு என்பதால் வரவேற்கிறேன். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்கெனவே நடந்துள்ளது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்துள்ளது. அந்த முறையில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அது வரவேற்கத்தக்கது" என்றார்.
அதேபோல செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, ``பாரத தேசம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். முன்பு பாரதம் என்று அழைத்தோம். எங்கெல்லாம் ஆங்கிலேயர்களின் தாக்கம் இருக்கிறதோ அதில் இருந்தெல்லாம் விடுபடவேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று பாரதி கூறியுள்ளார். பாரத தேசம் என்று அழைத்தால் மகிழ்வேன். உதயநிதி தவறாக பேசிவிட்டு, மீண்டும் அதையே சொல்கிறார்.
இலங்கையில் நம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்தியிலும், மாநிலத்திலும் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது அவர்கள் நிலைப்பாடு என்ன? ஆட்சியாளர்களுடன் அவர்கள்தான் இருந்தார்கள். பேச்சுக்கு அரை நாள் உண்ணாவிரதம் இருந்தனர். நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை மக்கள் புண்படும்படி உதயநிதி கருத்து சொல்லிவிட்டு, ராஜாராம் மோகன்ராய் காலத்துக்கு சென்றுவிட்டார். பெண்கள் உடன்கட்டை ஏறினர். அவர்கள் படிக்கவில்லை என்கிறார். ஆனால் பெண்கள் மகாராணிகளாக இருந்தார்கள். இடையில் ஆங்கிலேயர் சூழ்ச்சியால் அழுத்தங்கள் ஏற்பட்டது. கேரளம், மும்பை, சென்னை போல் பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும்’’ என்றார்.
from Latest news https://ift.tt/bgTsQ7O
0 Comments