ஆறாவது இடத்தில் இந்தியா!
மூன்றாம் நாள் முடிவில் 3 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்தை தக்கவைத்தது இந்தியா!
டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்
டென்னிஸ் - இந்தியாவின் சுமித் நாகல் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் பெபிட் ஜூகாயேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்!
இந்திய இணை எளிதில் வெற்றி!
டென்னிஸ் - கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி மற்றும் அங்கிதா 6-0,6-0 என்ற நேர் செட்களில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினர்!
வாலிபால்: ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா தோல்வி
ஆடவர் வாலிபால் - பாகிஸ்தானிடம் 21-25, 20-25, 23-25 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தையும், இந்தியா ஆறாவது இடத்தையும் பிடித்தது!
குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா!
ஹிருதய் சேதா, திவ்யகிருதி சிங், அனுஷ் அகர்வாலா மற்றும் சுதிப்தி ஹஜேலா ஆகியோர் அடங்கிய இந்திய கலப்பு அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது.
209.205 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்திய அணி அசத்தல்!
மூன்றாவது நாளில் முதல் பதக்கம்!
பாய்மரப் படகுப் போட்டியில் 17 வயது இந்திய வீராங்க நேஹா தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல். ILCA4 ரக போட்டியில் 11 போட்டிகளில் மொத்தம் 27 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்.
ஆடவர் ஸ்குவாஷ்: சிங்கப்பூரை வீழ்த்திய இந்தியா!
ஆடவர் ஸ்குவாஷ் தொடக்கப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய ஆடவர் அணி. நாளை அடுத்த போட்டியில் கத்தார் அணியை எதிர்கொள்ளவுள்ளது!
டென்னிஸ்: காலிறுதியில் அன்கிதா ரெய்னா
மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஆதித்திய கருணரத்னேவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிப்பெற்றார்!
4x100 மீட்டர் தொடர் நீச்சல் (Medley): இறுதிப்போட்டியில் இந்தியா!
ஆடவர் 4x100 மீட்டர் தொடர் நீச்சல் (Medley) போட்டியில் 3:40:84 வினாடிகளில் இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்ரீஹரி நட்ராஜ், லிகித் செல்வராஜ், சஜன் பிரகாஷ் மற்றும் தனிஷ் மாத்யூ அடங்கிய இந்திய அணி. தேசிய சாதனையையும் முறியடித்தது இந்த அணி!
இன்று மாலை 6.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கவுள்ளது!
காலிறுதியில் பவானி தேவி தோல்வி!
பெண்கள் வாள்வீச்சு Women's Individual Sabre பிரிவு காலிறுதியில் சீனாவின் ஷாவ் யாகியிடம் 7-15 என வீழ்ந்தார் தமிழக வீராங்கனை பவானி தேவி.
காலிறுதியில் அவதார் சிங்!
ஜூடோ ஆடவர் 100கிலோ பிரிவில் இந்தியாவின் அவதார் சிங் தாய்லாந்து வீரரான கிட்டிபோங் ஹான்ட்ராடினை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!
இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி 3-0 என எளிதில் பாகிஸ்தானை வென்றது. அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தான்வி கண்ணா அடங்கிய இந்திய அணி நாளை நேபாளத்தை எதிர்கொள்ளும்.
காலிறுதிக்குத் தகுதிபெற்றார் பவானி தேவி!
பெண்கள் வாள்வீச்சு Women's Individual Sabre பிரிவில் காலிறுதிக்குத் தகுதிபெற்றார் தமிழக வீராங்கனை பவானி தேவி.
தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்திலும் வென்ற பவானி தேவி!
பெண்கள் வாள்வீச்சு Women's Individual Sabre பிரிவில் ஐந்து குரூப் போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளார் தமிழக வீராங்கனை பவானி தேவி.
இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி!
சிங்கப்பூருக்கு எதிரான Pool A போட்டியில் 16-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி. உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியிலும் 16 கோல்கள் அடித்திருந்தது இந்திய அணி. அடுத்தடுத்த போட்டிகளில் வலுவான அணிகளான ஜப்பான் மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.
from Latest news https://ift.tt/lz0RLar
0 Comments