லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து அவர், ‘ரஜினி 171’ஐ இயக்குகிறார். ‘லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கும் படம் இது.
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸைக் கொடுத்திருக்கிறது. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான 11வது ‘SIIMA’ தென்னிந்திய திரைப்பட விருது விழாவில் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக திரிஷாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விழா மேடையில் லோகேஷ் ரஜினியின் படத்தை இயக்கவிருப்பது குறித்து கமல் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
இதுபற்றி பேசிய கமல், “கமல் ரசிகரான லோகேஷ், ரஜினியின் படத்தை இயக்குவதா!? என்று பேசுகிறார்கள். காமன் ரசிகர்களுக்கு அவ்வளவுதான் தெரியும். ‘கமல் 50’ விழாவில் ‘என்னைப்போலவும் ரஜினியைப் போலவுமான ஒரு நட்பு இதுக்கு முன்னாடி தலைமுறையில் இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை’ என்று கூறினேன். இனிவரும் தலைமுறைக்கு 'இனி யாரும் அப்படி இருக்க முடியாது' என்ற அர்த்தத்தில் சவாலாக அதைக் கூறவில்லை.
அப்படித்த்தான் இருக்க வேண்டும் என்ற வாழ்த்தாகத்தான் கூறினேன். வரும் தலைமுறை இதிலிருந்து இன்னும் மேம்பட வேண்டும் என்றுதான் கூறினேன். என் ரசிகர் லோகேஷ், ரஜினியை இயக்குவது எனக்குத்தான் பெருமை. அதுக்காக எனக்கும் ரஜினிக்கும் போட்டியில்லை என்றில்லை.
இருவரும் இன்னும் மும்பரமாகப் போட்டி போடுவோம். அதற்காக ஒருவரை ஒருவர் தட்டிவிடமாட்டோம். எங்களுக்குள் இருப்பது ஆரோக்கியமான போட்டி. அது அவரும் (ரஜினி) நானும் புரிந்து கொண்டு தேர்ந்தெடுத்துக் கொண்டது” என்று கூறினார். அரங்கில் அமர்ந்திருந்த லோகேஷும் கமலின் பேச்சிற்கு கைத்தட்டி நெகிழ்ந்தார்.
from Latest news https://ift.tt/IzywAbt
0 Comments