`அண்ணா பற்றிப் பேசியது எடப்பாடிக்குப் பிரச்னையில்லை!' - பண்ருட்டி ராமச்சந்திரன்
``அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய தகவல் தவறானது. ஆனால், அண்ணா பற்றிப் பேசியது எடப்பாடி தரப்புக்குப் பிரச்னையில்லை. அண்ணாமலை பேசி நான்கு நாள்களுக்குப் பிறகே, அவர்கள் பிரச்னையைக் கிளப்பினர். 2026-ல் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை பேசியதுதான், அவர்களுக்குப் பிரச்னை. தன்னை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க தலைமை முன்னிறுத்த வேண்டும் என சுயநலமாக நினைக்கிறார் எடப்பாடி." - ஓ.பி.எஸ் தரப்பின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன்!
`அதிமுக-வின் தலைமையை பாஜக மாற்றச் சொன்னால், ஏற்பார்களா?' - ஓபிஎஸ்
``ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றச் சொல்வதற்கு எடப்பாடி தரப்புக்கு என்ன அருகதை இருக்கிறது... `எடப்பாடி பழனிசாமியை மாற்றுங்கள்’ என பா.ஜ.க கூறினால், அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்வார்களா?" - ஓ.பி.எஸ்
`பா.ஜ.க தலைமையிலிருந்து தினமும் என்னிடம் பேசுகின்றனர்!' - ஓபிஎஸ்
``பா.ஜ.க-வின் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா என்பதை பா.ஜ.க-விடம்தான் கேட்க வேண்டும். பா.ஜ.க-வின் தேசியத் தலைமையிலிருந்து தினமும் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாருக்கு ஆதரவு என்று தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்!" - ஓ.பி.எஸ்
`திமுக, அதிமுக உள்ளூர் பகைவர்கள்!' - சீமான்
`தி.மு.க., அ.தி.மு.க எங்களுக்கு உள்ளூர் பகைவர்கள். இவர்களோடு எப்போது வேண்டுமானாலும் மோதிக்கொள்ளலாம். காங்கிரஸும் பா.ஜ.க-வும் எங்கள் பொது எதிரிகள். அவர்களை அடித்து விரட்டிவிட்டு, பிறகு தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு வருவோம்!' - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
மாணவர்களிடம் லஞ்சம் - கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!
மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, பேராசிரியர் ரவி ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தி.நகரில் திடீர் பள்ளம்!
சென்னை தி.நகரிலுள்ள நாயர் சாலையில், திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!
இந்தியாவின் பசுமைப் புரட்சியில் முக்கியமானவரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார். அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண் அறிவியல் முறைகளைக் கண்டறிந்த எம்.எஸ்.சுவாமிநாதன், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். பத்மபூஷண், எஸ்.எஸ்.பட்நாகர் உள்ளிட்ட விருதுகள் பெற்றவரான இவரை, இந்தியா உட்பட, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கின்றன.
"மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார்" - பிரேன் சிங்
மணிப்பூர் இனக்கலவரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன மாணவியும் மாணவனும் ஆயுதமேந்திய குழுவின் பிடியில் சிக்கி, காட்டில் இறந்து கிடக்கும் புகைப்படம் கடந்த வாரம் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், `மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருப்பதாக முதல்வர் பிரேன் சிங் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் பற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேன் சிங், ``நேற்று மாலை அமித் ஷா என்னை அழைத்து, குறிப்பிட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு விமானத்தில் சிபிஐ குழுவை அனுப்பவிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், `இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி வழக்கு பதிவுசெய்ய வேண்டும்’ என்றும், `யாரும் தப்ப முடியாது’ என்றும் அமித் ஷா தெரிவித்தார்" என்று கூறினார்.
from Latest news https://ift.tt/iF0nJcu
0 Comments