Japan: "அண்ணன் சேமிச்சு வச்ச பணத்தாலதான் அந்தப் படம் ரிலீஸ் ஆச்சு"-நடிகர் கார்த்தி!

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள `ஜப்பான்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னை நெரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் 'ஜப்பான்' படக்குழு மட்டுமில்லாமல் கார்த்தியின் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, பா. ரஞ்சித், முத்தையா, லோகேஷ் கனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகை தமன்னா, சத்யராஜ், சிபி சத்யராஜ், ஆர்யா, விஷால் இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். சூர்யாவும் இதில் கலந்து கொண்டு பேசியிருந்தார். எல்லோரும் நடிகர் கார்த்தி குறித்தும் 'ஜப்பான்' திரைப்படம் குறித்தும் பேசினர்.

கார்த்தி.

இதையடுத்து பேசிய நடிகர் கார்த்தி, "இங்க இருக்கும் போது என்ன சாதனைன்னு தெரில, ஆனா சரியான பாதைல போயிட்டிருக்கேன். 25 வயசு வரைக்கும் என்னுடைய பெற்றோர்கள்தான் என்னை வளர்த்தார்கள். அதுக்கு பிறகு என்னுடைய ரசிகர்கள்தான் என்னை வளர்த்தர்கள். ரசிகர்களுக்காகதான் ஒவ்வொரு நாளும் உழைக்கிறேன், ஓடுறேன்!. மணி சாரை ஜீனியஸ்ன்னு சொல்லுவாங்க, அவர் சினிமாவை அதிகமாக நேசிக்கிறார். 'நீ டைரக்டர் இல்ல, முதல்ல நடி'ன்னு முதல்ல ரிஸ்க் எடுத்து ஞானவேல்தான் முதல் படம் எடுத்தார். எந்த இயக்குநரிடமும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு கேட்டதே இல்லை. முதல் முறையாக ராஜூ முருகனிடம்தான் எனக்குன்னு கதை இருக்கான்னு கேட்டேன்.

கார்த்தி
'உலகத்தின் பொதுமொழி பசி' ன்னு வட்டியும் முதலும் புத்தகத்துல எழுதியிருப்பாரு. காந்திதான் தன்னோட வாழ்க்கைய முழுசா மக்களுக்கு திறந்து வச்சாரு.

அந்த மாதிரியான ஒரு புத்தகம்தான் 'வட்டியும் முதலும்'. வட்டியும் முதலும் படிச்சேன். அவரோட வாழ்க்கையா வெளிப்படையா எழுதியிருந்தார். அந்த புத்தகத்தை படிக்கிறது மிகவும் அவசியம். நம்ம பார்வை மாறும். சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை அவர் சொல்லியிருப்பார். அதைதான் ஜப்பான் படத்துல ' நீங்க சொல்றதை சொல்லுங்க, அதுல மக்களுக்கு பிடிக்குற சில விஷயங்களை சேர்த்துக்கோங்க'னு சொன்னேன். ரஜினி சாரை சமீபத்துல மீட் பண்ணும் போது ' பருத்தி வீரன்' மாதிரி ஒரு கதாபாத்திரம் பண்ணுங்க'னு சொன்னாரு. அந்த மாதிரியான கதைக்கு நான் எங்க போவேன்னு சொன்னேன். இந்த படத்தோட அவுட் பார்க்கும் போது அதே மாதிரி நக்கல் கதாபாத்திரம் எனக்குத் தெரியுது" என்றார்.

சூர்யா

மேலும், நெப்போ கிட் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த கார்த்தி, " 'டேய் உங்க அப்பா காசு பணம் சேர்த்து வைக்கல, பேரு தான் வச்சிருக்கார். அதை கெடுத்துடாதீங்க' னு அம்மா சொல்லிருக்காங்க. எங்க அப்பா, சினிமாக்கே வராதீங்கன்னு சொன்னார். சினிமால ஒரு வாய்ப்பு உருவாக்கிகலாம்ன்னு டைரக்ஷன் வந்தேன். அப்போ ஞானவேல்தான் நடிக்க கூட்டிட்டு வந்தாரு. என்னை 'நெப்போ -கிட்' ன்னு சொன்னால் நான் இல்லைன்னுதான் சொல்லுவேன். அண்ணன் இருந்தாரு, பருத்தி வீரன் திரைப்படம் மூணு முறை ரிலீஸ் தள்ளிப் போச்சு. அவருடைய சேமிப்புகளை வச்சுதான் அந்த படத்தை ரிலீஸ் பண்ணாங்க" என்று கூறினார்.



from Latest news https://ift.tt/YEnMG4S

Post a Comment

0 Comments