Lokesh Kanagaraj: "அந்த இன்ட்ரோ சீனை எல்லாரும் ரொம்ப லவ் பண்ணுவாங்க!" - லோகேஷ் கனகராஜ் பேட்டி

சினிமா விகடனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருந்த நேர்காணல் இதோ!

ட்ரெய்லர்ல ஹைனா (Hyena) கூட சண்டை போடுற மாதிரி சீன் வருது. அந்த சீன் பத்தி சொல்லுங்க?

"ஹைனா (Hyena) போர்ஷன்ஸ் படத்துல புதுசா இருக்கும். நம்ம ஆடியன்ஸுக்கு பயங்கர புதுசா இருக்கும். அதை தியேட்டர்ல பார்க்கும்போது 10 நிமிஷம் எபிசோட் ரொம்ப கிராண்டியரா, செமையா இருக்கும். ஹைனா கத்தாது, உறுமவும் செய்யாது. Hyena Laugh -ன்னு தான் சொல்லுவாங்க. அது சிரிச்ச மாதிரி சவுண்டு தான் கேட்கும். அந்த சத்தமே ஒரு மாதிரி பயம் கொடுக்கக்கூடியது. அதோட தாடை-லாம் சிங்கத்தைவிட பவரா இருக்கும். அதனால, இதை வச்சி பண்ணலாம்னு முடிவு பண்ணோம். மத்ததெல்லாம் நிறைய பாத்துட்டோம். புதுசா இருக்கணும்னு இதைப் பண்ணோம். இதுக்குப் பின்னாடி இருக்கிற கதை, படம் பார்க்கும்போது புரியும்."

லோகேஷ்

'லியோ' படத்தைப் பத்தி கமல் சார் உங்கக் கிட்ட ஏதாவது கேட்பாரா?

"எப்போ மீட் பண்ணினாலும் கேட்பாரு. இப்போ கூட, சென்சார் பண்ணும் போது அவர் பக்கத்துல டப்பிங் பண்ணிட்டு இருந்தாரு. ஒரே ஸ்டூடியோவுல தான் இருந்தோம். நேரா அவர்கிட்ட போய், அரைமணி நேரம் பேசிட்டு இருந்தேன். அவர் கிளம்பின பிறகுதான், மறுபடியும் சென்சார் பார்க்கப் போனேன். போகும்போது, படம் எப்படி வந்திருக்கு? என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. பார்த்தவுடனே, அடுத்து என்னன்னு பேச ஆரம்பிச்சுடுவாரு. அதை எப்போதுமே கேப்பாரு. ஒரு ரெகுலர் ஃபோன் கால் இருக்கும். ஃபோன் பண்ணி, என்ன பண்ணுறன்னு கேப்பாரு. அப்படியே இல்லைன்னாலும், அவரோட ஆஃபிஸுக்கு போய் நானே பேசிட்டு வந்துடுவேன்."

சீரியஸா ஆக்ஷன் பண்ணும்போது, பாட்டு போடுறது 'கைதி' படத்துல இருந்து பண்ணிட்டு வர்றீங்க. 'லியோ'-வுல அது மாதிரி எதாவது இருக்கா?

"கைதி படத்துல மட்டும் இல்ல. அதுக்கு முன்னாடி நான் பண்ணுன களம் ஷார்ட் ஃபிலிம்லயே இதை பண்ணிருப்பேன். 2013ல ஷூட் பண்ணினது. அதுலயும் பாட்டு வச்சி தான் பண்ணிருப்பேன். சீரியஸா இருக்கிற சிச்சுவேஷன்ல, அதுக்குப் பின்னாடி ஒரு ரெட்ரோ சாங் வந்தா, பார்க்குறவங்களுக்கு ஒரு மூட் மாறும். சீரியஸா பாக்குறதா? சிரிக்கிறதான்னு ஒரு சின்ன குழப்பம் வரும். அது ஒரு மாதிரி ஃபன்னா இருக்கும். அது எனக்குப் புடிக்கும். இந்தப் படத்துலயும் அந்த மாதிரி சீன் இருக்கு. அது சர்ப்ரைஸா இருக்கும்."

லோகேஷ்

'மாவீரன்' மடோன் அஸ்வின், 'குரங்கு பொம்மை' நித்திலன், 'உறியடி' விஜய் இந்த மாதிரி உங்க ஃப்ரெண்ட்ஸ் கேங் கூட கதையைப் பத்தி சொல்லுவீங்களா?

மாவீரன் படம் டிஸ்கஷன் நடந்தப்போ கடைசி ரெண்டு நாள் போக முடியல. விக்ரம் படத்தோட டிஸ்கஷனுக்கு அஸ்வின், நித்திலன் ரெண்டு பேருமே வந்திருந்தாங்க. எல்லாருக்குமே அவங்கவங்க பண்ணப்போற கதைகளும் தெரியும். எங்க எல்லாரோட படத்துக்கும் பிலோமின் ராஜ் தான் எடிட்டர். அவன் எடிட்டர்-ங்கிறதால எல்லாமே தெரிஞ்சிடும். உறியடி விஜய்யோட படம் ரிலீஸ் ஆகப்போகுது. அதை பிரசண்ட் பண்ணலாம்னு இருக்குறேன். லியோ வேலைகள் முடிஞ்சதுக்கு பிறகு அறிவிப்பு வரும். ரத்னா என்னோட புரொடெக்சன்ல படம் பண்ணுறான்.

ஒருவழியா மன்சூர் அலிகான் சாரை இந்தப் படத்துல நடிக்க வச்சிட்டீங்க. அவரைப் பத்தி சொல்லுங்க!

செம்ம ஃபன். அவர் ரொம்ப ஃபன்னான ஆளு. ஆனா, அந்த ஃபன் டைம் எதுவுமே படத்துல இல்ல. படத்துல சீரியஸா இருக்குற மாதிரி தான் இருக்கும். அவரோட இன்ட்ரோ சீனை எல்லோருமே ரொம்ப லவ் பண்ணுவாங்க.



from Latest news https://ift.tt/qJAhwlS

Post a Comment

0 Comments