தஞ்சாவூர் அருகே உள்ள பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் விஜய் (22). இவர் தெருவில் கிடக்கும் காலி மதுப்பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு பட்டித்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் கிடந்த காலி மதுப்பாட்டில்களை பொறுக்கியுள்ளார். அப்போது சூலமங்கலம் பகுதியை சேர்ந்த சரவணன் (32), பரணி (31), விக்னேஷ் (26)ஆகிய மூன்று பேரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள், விஜயிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தங்களது இருசக்கர வாகனத்தில் விஜயை துாக்கி கொண்டு சூலமங்கலம் பகுதிக்கு சென்றனர். அங்கு ஆள் இல்லாத பகுதிக்குள் விஜயை அழைத்து சென்று தன்பாலின உறவில் ஈடுப்பட்டுள்ளனர். மூன்று பேரும் ஒரே நேரத்தில் விஜய்யை தொந்தரவு செய்ததில் வலி தாங்க முடியாமல் விஜய் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து மூன்று பேரும் கல்லை எடுத்து விஜய் முகம் உள்ளிட்ட பகுதிகளில் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன், பரணி, விக்னேஷ் மூன்று பேரும் சூரக்கோட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து சூரக்கோட்டை சென்ற போலீஸார், விஜய்யை கொலை செய்த விக்னேஷ் மற்றும் அவர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த, சூரக்கோட்டையைச் சேர்ந்த அருண் (34) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். போலீஸ் வருவதை அறிந்த சரவணன், பரணி இரண்டு பேரும் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், `இளைஞரை தன்பாலின ஈர்ப்புக்கு பயன்படுத்தி கொலை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தோம். இதில் கைது செய்யப்பட்ட இருவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தப்பிய இரண்டு பேரை தேடி வருகிறோம்’ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Vikatan Latest news https://ift.tt/RxYomF1
0 Comments