Fight Club (தமிழ்)
'உறியடி' திரைப்படத்தின் துணை இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கத்தில் `உறியடி' விஜய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Fight Club'. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் திரைப்படமான இது டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆலம்பனா (தமிழ்)
பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர், பார்வதி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆலம்பனா'. காமெடி, திரில்லர் திரைப்படமான இது டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கண்ணகி (தமிழ்)
யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் மயில்சாமி, கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, யஷ்வந்த் கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணகி'. வெவ்வேறு பின்னணியில் இருக்கும் பெண்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் இப்படம் டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விவேசினி (தமிழ்)
பவன் ராஜகோபாலன் இயக்கத்தில் நாசர், சுரேஷ் சக்ரவர்த்தி, மேக ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விவேசினி'. சைக்கலாஜிகல் ஹாரர் திரில்லர் திரைப்படமான இது டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Pindam (தெலுங்கு)
சாய்கிரண் டைடா இயக்கத்தில் ஈஸ்வரி ராவ், ஸ்ரீகாந்த், ஸ்ரீனிவாஸ் அவசரலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Pindam'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Silent Night (ஆங்கிலம்)
ஜான் வூ இயக்கத்தில் ஜோயல் கின்னமன், கேடலினா சாண்டினோ மோரேனோ, கிட் குடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் 'Silent Night'. மிகுந்த துக்கத்திலிருக்கும் தந்தை, இரக்கமற்ற கும்பலை கிறிஸ்துமஸ் அன்று பழி வாங்க முயல்வதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்கள்
Koose Munisamy Veerappan (தமிழ்) - Zee5
ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஆர்.வி.பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் எழுத்தில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள வீரப்பன் பற்றிய ஆவணப்படத் தொடர்தான் இந்த 'Koose Munisamy Veerappan'. வீரப்பன் குறித்தப் பல படங்களும், தொடர்களும் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. அவ்வகையில் நக்கீரன் கோபாலுடன் வீரப்பன் பேசிய பல காணொலிகளுடன், விரிவான அலசல்களுடன் வீரப்பனின் வாழ்க்கைப் பயணத்தையும், அது தொடர்பான அரசியலையும் பேசுகிறது இது. நக்கீரன் கோபால், சீமான், ரோகினி, என். ராம் உள்ளிட்டோர் வீரப்பன் குறித்து பேசுகின்றனர். இந்த வெப்சீரிஸின் முதல் சீசன் ஆறு எபிஸோடுகளாக Zee5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.
Vyooham (தெலுங்கு) - Amazon Prime Video
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அஜ்மல் அமீர், வாசு இந்தூரி, கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் 'Vyooham'. க்ரைம், திரில்லர் வெப்சீரிஸான இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகியுள்ளது.
The Freelancer (இந்தி) - Disney + Hotstar
நீரஜ் பாண்டே இயக்கத்தில் மோஹித் ரெய்னா, அனுபம் கெர், காஷ்மீர் பர்தேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் 'The Freelancer'. கடந்த செப்டம்பர் மாதம் இதன் முதல் 4 எபிசோடுகள் வெளியான நிலையில் தற்போது அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகியுள்ளன. சிரியா போர் பற்றிய 'A Ticket To Syria' என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள வெப்சீரிஸான இது 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் டிசம்பர் 14ம் தேதி வெளியாகியுள்ளது.
The Crown Season 6 (ஆங்கிலம்) - Netflix
பீட்டர் மோர்கன் ஆக்கத்தில் எட் மெக்வே, லூதர் ஃபோர்டு, இமெல்டா ஸ்டாண்டன், டொமினிக் வெஸ்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் 'The Crown Season 6'. 'The Crown' சீரிஸின் முந்தைய சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் இந்த கடைசி சீசன், 'Netflix' ஓடிடி தளத்தில் டிசம்பர் 14ம் தேதி வெளியாகியுள்ளது.
Reacher Season 2 (ஆங்கிலம்) - Amazon Prime Video
நிக் சாண்டோரா உருவாக்கத்தில் ஆலன் ரிட்ச்சன், மரியா ஸ்டென், செரிண்டா ஸ்வான், ஷான் சிபோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ஆங்கில வெப்சீரிச் ' Reacher season 2'. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் பரபரப்பான ஆகஷன் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் நிறைந்த இந்த வெப்சீரிஸ் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் டிசம்பர் 15ம் தேதி வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
ஜப்பான் (தமிழ்) - Netflix
'ஜோக்கர்', 'குக்கூ', 'ஜிப்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜப்பான்'. காமெடி, அரசியல் நையாண்டி, நகைக்கொள்ளை உள்ளிட்டவற்றை பற்றிப் பேசும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Kida (தமிழ்) - Aha
ரா. வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட் தீபன், பாண்டியம்மா, 'பூ' ராமு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் 'கிடா'. தாத்தா, பேரன் மற்றும் அவர்கள் வளர்க்கும் ஆடு மூன்றையும் சுற்றி நடக்கும் மனதிற்கு இலகுவான கிராமத்துக் கதையான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Raakshasa Kaavyam (தெலுங்கு) - Aha
ஸ்ரீமான் கீர்த்தி இயக்கத்தில் அபய் பெத்திகாண்டி, அன்வேஷ் மைக்கேல், தயானந்த் ரெட்டி உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'Raakshasa Kaavyam'. க்ரைம், ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Sesham Mike-il Fathima (மலையாளம்)
மனு சி. குமார் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், ஃபெமினா ஜார்ஜ், மாலா பார்வதி உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Sesham Mike-il Fathima'. கால்பந்து வர்ணனையாளராக வேண்டும் என்ற கனவோடு பயணிக்கும் மலபாரி முஸ்லிம் பெண்ணின் கதைதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Falimy (மலையாளம்) - Disney + Hotstar
டான் பலதரா இயக்கத்தில் வினய் ஃபோர்ட், நில்ஜா கே. பேபி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Falimy'. மத பிரிவினைகளைப் பற்றிப் பேசும் ஃபேமலி என்டர்டைமன்ட் திரைப்படமான இது 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/QVcYJjf
0 Comments