வில்லேஜ் வைரல் - 5 - “365 நாளும் வீடியோ போட நான் கண்டுபிடிச்ச வழி..!” - ‘மீனம்மா’ மேரி கில்டா ராணி

இந்தியாவில் மட்டும் 46.2 கோடி யூடியூப் சேனல்கள் ஆக்டிவ்வாக இயங்குகின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரே வழி, பெருவாரியானவர்களுக்கும் பிடித்தமான கன்டென்ட்டை கொடுப்பதுதான்!

அப்படியான கன்டென்ட்டை கொடுத்து சேனல் தொடங்கிய ஒரே ஆண்டில் சுமார் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்களை சம்பாதித்திருக்கிறார் ‘கன்னியாகுமரி மார்கெட்ஸ்’ (kanyakumari markets) யூடியூப் சேனலை நடத்தும் மேரி கில்டா ராணி. கன்னியாகுமரி மாவட்டத்தில், நுள்ளிவிளை என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் எம்.ஏ பட்டதாரியான கில்டா. தனியார் நடத்தும் கம்பெனி செகரெட்டரி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கணவர் ராபின் ஜினோ ஆட்டோ ஓட்டுநர். அன்சிலின் ஜியோனா, ஆன்னி ரிஷோ, ஸ்டார் என மூன்று பெண் குழந்தைகள்.

“ஹாய் ஃபிரண்ட்ஸ்...இன்னிக்கு மீன் வாங்கி யாச்சி... என்ன மீன் வாங்கியிருக்குன்னு பாத்திரு வோமா?” என்று ஆரம்பிக்கும் வீடியோக்களில் முகம் காட்டாமல் கைகளை மட்டுமே காண்பித்து ஹிட் அடித்திருக்கிறார். அவள் விகடனுக்காக முதன்முதலில் தன் முகத்தை வெளிப்படுத்தி பேச ஆரம்பித்தார் கில்டா.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி சமையல் வீடியோ சேனல் தொடங்குனேன். அதுலயும் முகம் காட்டாம சமையல் மட்டும் செய்வேன். என் ரெண்டாவது பொண்ணு குரல் கொடுப்பா. ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ்தான் இருந்தாங்க. வியூஸ் போகவே இல்ல. ஆனா, ஜெயிச்சே ஆக வேண்டிய கட்டாயத்துல இருந்தேன். கடன் பிரச்னை, பிள்ளைங்களை நல்லா வளர்க்கணும்ங்குற நெருக்கடி. யாராவது ஆயிரம் ரூபாய் கடன் தர மாட்டாங்களான்னு ஏங்கின நாள்கள் உண்டு. ‘உன்னை நம்பி எப்படி காசு தர முடியும்’னு முகத் துக்கு நேராவே கேட்டிருக்காங்க..” பேச்சில் ஆதங்கமும் வலியும். நிதானித்துத் தொடர்ந்தவர் வீடியோவுக்கென தனி டிராக் பிடித்தது பற்றி பகிர்ந்தார்.

“365 நாளும் வீடியோ போடணும். அதுக்கு என்னை சுத்தி என்ன இருக்கோ அதைத்தான் கன்டென்ட்டா மாத்தணும்னு நினைச்சேன். எங்க பகுதியில வாரத்துல 6 நாளும் சமையலுக்கு மீன் வாங்குவோம். ஞாயிற்றுக் கிழமைன்னா இறைச்சி வாங்குவோம். மீன் வாங்குறது, வெட்டுறது, குழம்பு வைக்கிற தெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதையே கன்டென்ட்டா மாத்திட்டேன். எனக்கு பெருசா எடிட் பண்ணவும் தெரியாது. அதனால சின்ன சின்ன காட்சிகளா ஷூட் பண்ணிட்டு எல்லாத்தையும் ஒண்ணா சேர்த் துட்டு வாய்ஸ் ஓவர் பேசிருவேன்” என்பவருக்கு அவர் கணவர் ராபின்தான் மிகப்பெரிய சப்போர்ட். ‘உனக்கு என்ன புடிச்சிருக்கோ அதைச் செய். என்னிக்காவது ஒருநாள் நமக்கும் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பு வரும்’னு என் வீட்டுக்காரர்தான் நம்பிக்கை கொடுத்திட்டே இருந்தாரு. என் ஆபீஸ்லயும் ‘தைரியமா பண் ணுங்க’ன்னு பாசிட்டிவ்வா சொல் வாங்க” என்றவரிடம் முகம் காட்டத் தயங்குவதற்கான காரணத்தைக் கேட்டோம்.

“சேனல் தொடங்கினப்போ 90% நல்ல கமென்ட்ஸ் வந்தாலும் 10% மோசமான கமென்ட்ஸ் வரும். முகம் காட்டாம வீடியோ போடும்போதே என் கை, குரல்னு எல்லாத்தையும் கமென்ட் பண்ணுவாங்க. அது மாதிரியான ஆட்களை எதிர் கொள்ள தைரியம் இல்லாமதான் முகம்காட்ட விரும்பல. நான் பேசுற தமிழ் நல்லா இல்ல, என் குரல் நல்லா இல்லன்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனா அதுக் கெல்லாம்தான் இப்ப சேனல்ல ஃபேன்ஸ் இருக்காங்க. 10,000 சப்ஸ்கிரைபர்ஸ் வந்த பிறகுதான் என் குரல் மேல எனக்கே ஒரு நம்பிக்கை வந்துச்சு...” கூச்சம் கலந்த சிரிப்புடன் பேசிய கில்டா எதிர்காலத் திட்டம் பற்றி கூறினார்.

“சேனல்ல நான் பயன்படுத்துற மண் பாத்திரம், பொருள்கள் எல்லாம் பார்த்துட்டு எங்களுக்கும் வேணும்னு நிறைய பேர் கேக் குறாங்க. அதை வாங்கிக் குடுக்குற பிசினஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு” என்றவர், யூடியூப் சேனல் தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை மகிழ்ச்சியுடன் சொன்னார். “கடன் வாங்காம ஒரு மாசத்தைக்கூட நகர்த்த முடியாம இருந்தோம். இன்னிக்கு யார் கிட்டயும் போய் கடன் கேக்குற நிலைமைக்கு கடவுள் எங்களை வைக்கல” நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஒரு சேர நிறைவு செய்தார்.

- தொடரும்...



from Vikatan Latest news https://ift.tt/LHJUDKP

Post a Comment

0 Comments